15 நவம்பர், 2009

சீனாவை கட்டுப்படுத்த முற்படமாட்டோம்* சொல்கிறார் அதிபர் ஒபாமா


Top global news update


டோக்கியோ:"சீனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிலும் அமெரிக்காஈடுபடாது' என, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று ஜப்பான் சென்றார். டோக்கியோவில்நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:

உலகளவில் சீனாவின் பங்கு அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது. அந்நாட்டுடனான, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளைவலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். எனினும், அந்நாட்டின் அனைத்துசெயல்பாடுகளையும் அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது.அனைத்து மக்களின் மதம் மற்றும்கலாசாரம் தொடர்பான அடிப்படை கருத்துக்கள் குறித்து பேசவும் தயக்கம் காட்டாது.

சீனாவின் வளர்ச்சியை கண்டு, அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எதிலும் அமெரிக்கா ஈடுபடாது.அணு ஆயுதசோதனை மற்றும் அது தொடர்பான திட்டங்களால், அமெரிக்காவையும் மற்ற நாடுகளையும் வட கொரியா அச்சுறுத்தமுடியாது. வட கொரியாவின் அச்சுறுத்தலுக்கு அமெரிக்கா பயப்படாது.

இது தொடர்பான எங்கள் நடவடிக்கைகளை வெறும் வார்த்தையால் மட்டுமல்லாது, செயல்கள் மூலமும்வெளிப்படுத்துவோம். புவி வெப்பமயமாதலை தடுக்க, வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு ஒபாமா பேசினார்.தனது பேச்சின்போது, திபெத் விவகாரம் குறித்து அவர் எந்த கருத்தையும்தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக