15 நவம்பர், 2009

அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே வேறுபட்டுள்ள மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியுமென இந்திய நிதியமைச்சர் தெரிவிப்பு-

இராணுவ ரீதியான வெற்றி அடையாளப்பட்ட நிலையில் அரசியல் அரங்கில் அனைத்துத் தரப்பினரும் பங்கு கொள்ளவும் நன்மைகளைப் பெறவும் கூடிய வெற்றியொன்றை அடைய வேண்டியுள்ளதாக இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற லக்ஸ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த உரையின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியல்தீர்வு திட்டமொன்றை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே இன, மத அடையாளங்களால் வேறுபட்டுள்ள மக்களின் நியாயமான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியுமென்றும் அவர் கூறியுள்ளார். மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களில் பல்லாயிரக் கணக்கானோர் மீள்குடியமர்த்தப்பட்டமையை தாம் வரவேற்பதாகவும், இதுபோன்றதொரு தருணத்தில் இலங்கைக்கு இந்தியா உதவத் தயங்கவில்லையென்றும் இந்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வடக்கின் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக 500கோடி இந்திய ரூபாய் வழங்க தாம் அறிவித்துள்ளதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக