11 மே, 2010

ஈரான் ஏவுகணை சோதனை






ஈரான் நேற்று முதன் முதலாக கடலுக்குள் குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை சோதனை நடத்தியது. அதன் பெயர் பாஜா-5. இது சுமார் 75 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கக்கூடியது.

இதற்கு முன்பு போரின்போது இது பயன்படுத்தப்படவில்லை. தற்போதுதான் முதன் முதலாக வளைகுடா கடலில் தண்ணீருக்குள் ஏவி சோதித்து பார்க்கப்பட்டது. இந்த தகவலை ராணுவ துணை தலைமை அதிகாரி கியோமர்ஸ் ஹைதரி தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த ஏவு கணை கடலுக்கு வெளியே ஏவி சோதனை நடத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அடையாளம் தெரிவதற்காக இரும்பு கம்பியை காய்ச்சி சூடு போடும் மாவோயிஸ்டுகள்





இந்தியாவில் 6 மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் மிக வலிமையாக உள்ளனர். அவர்கள் மத்திய பாதுகாப்புப்படை வீரர்களை எதிர்த்து போரிடுவதற்காக பல்வேறு ரகசிய குழுக்களை உருவாக்கி உள்ளனர்.

இந்த குழுக்களில் எஸ்ஏஎஸ் என்றழைக்கப்படும் சிறப்பு நடவடிக்கை குழுவும் ஒன்று. இந்த குழுவில் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இருப்பார்கள். இவர்கள் அனைவரும் அனைத்து வகை ஆயுதங்களையும் கையாள பயிற்சி பெறுகின்றனர். சமீபகாலமாக இவர்கள் தற்கொலை தாக்கு தலிலும் ஈடுபடுகிறார்கள்.

இந்த சிறப்பு குழுவில் எல்லா மாவோயிஸ்டுகளாலும் இடம் பெற இயலாது. துடிப்புள்ள இளைஞர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்.

அவர்கள் தனித்து அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக சிறப்புக் குழுக்களில் உள்ள மாவோயிஸ்டுகளின் கைகளில் குறியீடு இடப்படுகிறது. இரும்பு கம்பியை காய்ச்சி சூடு போட்டு குறியிடப்படும்.

வலது கையின் கீழ்ப்பகுதியில் இந்த குறியீடும் நம்பரும் இடம்பெறும். ஒரு மாவோயிஸ்டு எந்த மாநிலத்தின், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை சூடு வைத்துள்ள குறியீடு மூலம் கண்டுபிடித்து விடலாம்.

சமீபத்தில் மேற்குவங்க போலீசாரிடம் சுசீல் ஹெம் பிராம் என்ற மாவோயிஸ்டு சிறப்பு குழு தீவிரவாதி சிக்கினான். அவனிடம் இருந்து இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பிரதி ஊடக அமைச்சர் நியமிக்கப்படமாட்டார்

ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சுக்கென இம்முறை பிரதி அமைச்சரை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அமைச்சின் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வார் எனவும் அதனால் அந்த அமைச்சுக்கு பிரதியமைச்சரை இம்முறை நியமிக்காமல் விடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அமைச்சரவையில் ஊடகத்துறை பிரதியமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்ட போதிலும் கடந்த 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அவர் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துகொண்டதுடன் அவருக்கு நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பதவியே வழங்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா நாளை நீதிமன்றில் ஆஜர்



ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்படவிருக்கின்றார்.

இதனையொட்டி புதுக்கடை மஜிட்ரேட் நீதிமன்ற கட்டிடத்தொகுதி இராணுவத்தினரால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியை ஏந்திவந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக அவர் கூறியது தொடர்பில் விசாரிப்பதற்கே பொன்சேகாவை நீதிமன்றத்திற்கு அழைத்துவருவதற்கு இரகசிய பொலிஸார் நீதிமன்றிடம் கோரியிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி நடத்தும் பேச்சுவார்த்தையில் இன்று முடிவு புதிய அரசு 25-ந் தேதிக்குள் பதவி ஏற்கிறது



இங்கிலாந்தில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக, லிபரல் ஜனநாயாக கட்சியுடன் கன்சர்வேடிவ் கட்சி நடத்தும் பேச்சுவார்த்தையில் இன்று முடிவு எட்டப்படுகிறது. புதிய அரசு, 25-ந் தேதிக்குள் பதவி ஏற்க உள்ளது.

தனிப்பெரும்பான்மை இல்லை

இங்கிலாந்தில் கடந்த வாரம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது, ஆட்சி செய்து வரும் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்தது. மொத்தம் உள்ள 650 இடங்களில் 258 இடங்களை மட்டுமே அந்த கட்சி பெற்றது. ஆனால், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு 306 இடங்கள் கிடைத்தன.

எனினும், ஆட்சி அமைப்பதற்கு இந்த எண்ணிக்கை போதாது. அதே நேரத்தில் மூன்றாவது இடத்தை பிடித்த லிபரல் ஜனநாயக கட்சிக்கு 57 இடங்கள் கிடைத்தன. அந்த கட்சியின் ஆதரவோடுதான் புதிய அரசு அமைக்க முடியும். எனவே, அந்த கட்சியோடு கன்சர்வேடிவ் கட்சி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

வர்த்தகத்தில் மாற்றம்

பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரண்டு கட்சிகள் சார்பிலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. சில முக்கிய இலாகாக்களின் காபினெட் மந்திரி பதவியை லிபரல் கட்சி கேட்கிறது. அதைத் தொடர்ந்து, அந்த கட்சியின் தலைவர் நிக் கிளவுக்குடன் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் டேவிட் கேமரூன் பேச்சு நடத்தினார்.

இதற்கிடையே, தற்போதைய பிரதமர் கார்டன் பிரவுனும், தொழிலாளர் கட்சி சார்பாக நிக் கிளவுக்குடன் பேச்சு நடத்தினார். இது போன்ற இழுபறியான நிலைமையால் இங்கிலாந்து வர்த்தகத்திலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தை குறியீட்டு எண்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரசியல் நெருக்கடி தீர வேண்டும் என நிதிச் சந்தை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இன்று இறுதி முடிவு

இதனால், கன்சர்வேடிவ் கட்சிக்கும் லிபரல் கட்சிக்கும் இடையே இன்று உடன்பாடு எட்டப்படும் என்று தெரிகிறது. இந்த தகவலை, தற்போதைய பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலிஸ்டைர் டார்லிங் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "பேச்சுவார்த்தைகள் நீடித்து வருவது நல்லதல்ல என்று கருதுகிறேன். லிபரல் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக அறிந்தேன். இந்த பேச்சு வார்த்தையில், கூட்டணி உண்டா? இல்லையா? என்பது குறித்து இறுதி முடிவு காணப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.

25-ந் தேதிக்குள்

தொங்கு பாராளுமன்றம் அமையும் என்பதை எதிர்பார்த்து தேர்தலுக்கு முன்பே சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மந்திரிசபை செயலாளர் குஸ் ஓ டொன்னல் சமர்ப்பித்து இருந்தார். அதன்படி, 25-ந் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். அன்றைய தினம், புதிய பாராளுமன்றத்தில் இங்கிலாந்து ராணி உரையாற்றுவார்.

எனவே, முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்து 25-ந் தேதிக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வருவது அவசியம். மேலும், புதிய வழிகாட்டு விதிகளின்படி, உடனடியாக மீண்டும் தேர்தல் நடத்துவதும் தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்ச்செல்வன் குடும்பம் இந்தியா செல்ல அனுமதி :



விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவில் அரசியல் புகலிடம் கோரவிருப்பதாக பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போது கைதுசெய்யப்பட்ட தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் தற்போது இராணுவத்தினரின் பாதுகாப்பில் தங்க வைக்கட்டிருக்கின்றனர்.

தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினரை இராணுவத்தினர் நன்றாகப் பராமரித்து வருவதாகவும் பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவுக்குச் செல்வதற்கான அனுமதி கோருவதாகவும், அவர்களது கோரிக்கை கவனத்திற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் போராளிகள் அல்லர் என்பதுடன், அவர்கள் பொதுமக்கள் எனவும் பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டினார்.

அவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு தான் கொண்டுசெல்லவிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கராச்சி ஏர்போட்டில் ஷூ பாம்பர் கைது

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

கராச்சி : ஷூ பாமுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவனை கராச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
சிவில் இன்ஜினியரான பைஸ் முகமது (30) என்பவன் விமான நிலையத்துக்குள் வந்துள்ளான். விமானத்தில் ஏறுவதற்கு முன் அவனை சோதனை செய்தபோது சோதனை கருவி சத்தம் எழுப்பியது. சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக சோதனையிட்டதில் அவன் அணிந்திருந்த ஷூவில் நான்கு பாட்டரிகள் மற்றும் வெடிக்கச் செய்யும் ஒயர்களுடன், ஆப் மற்றும் ஆன் செய்யும் பட்டன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பைஸ் முகமதுவிடம் நடத்திய விசாரணையில், அவன் கராச்சியில் வசித்து வந்ததும் தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் மஸ்கட் செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது.
விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது இந்த வெடிபொருளை வெடிக்கச் செய்திருந்தால் பெரும் ஆபத்து நிகழ்ந்திருக்கும். ஆனால் இவனை விமான நிலையத்திலேயே கைது செய்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வடமேற்கு பகுதியான கைபர் பக்துன்கவாவில் இயங்கி வரும் தலிபான் மற்றும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என கராச்சி போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வாடகை தாயின் இரட்டையருக்கு அனுமதி மறுப்பு



இஸ்ரேலை சேர்ந்த ஓரினச்சேர்க்கை ஆண், இந்திய வாடகைத் தாய் மூலம் பெற்ற இரட்டைக் குழந்தைகள் இஸ்ரேல் வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
டான் கோல்ட்பெர்க் என்பவர், இஸ்ரேலில் தனியாக வசிக்கிறார். அவருக்கு குழந்தை ஆசை வந்தது. மும்பையை சேர்ந்த வாடகைத் தாய் மூலம் செயற்கை கருவூட்டல் முறையில் சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவற்றுடன் நாடு திரும்ப முயன்றார் டான்.
ஆனால், குழந்தைகளுக்கு தந்தை என்று சோதனையில் டான் நிரூபித்த பிறகே அனுமதி என்று இஸ்ரேல் குடும்ப நீதிமன்றம் கூறி விட்டது. எனவே, கடந்த 2 மாதங்களாக மும்பை ஓட்டலில் கைக்குழந்தைகளுடன் டான் தங்கியுள்ளார். தாய்நாட்டின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

பார்வதி அம்மாள் இலங்கை திரும்பினார்- சிவாஜிலிங்கம்




விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து இன்று மாலை இலங்கை வந்தடைந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வீரகேசரி இணையதளத்திற்கு தெரிவித்தார்.

பார்வதி அம்மாள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இந்தியா அவருக்கான அனுமதியை வழங்கவில்லை. இந் நிலையில் மலேசியா ஒரு மாதம் தங்குமிடம் வீசாவை வழங்கி சிகிச்சை பெற அனுமதியளித்திருந்தது.

எனினும் பார்வதி அம்மாள் இன்று மாலை யாரும் எதிர்பாராத வகையில் கொழும்பு சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது இணையதளத்துக்கு மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் 79 பிச்சைக்காரர்கள் கைது

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பிச்சைக்காரர்கள் 79 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பிச்சைக்காரர்கள் போன்று நடமாடுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ரயில் மற்றும் பஸ்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் வீதிகளில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாயுள்ளதால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவித்தது. இவர்கள் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான கட்டடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...