இந்தியாவில் எல். ரீ. ரீ. ஈ. முகாம்கள் கிடையாது என இந்திய அரசாங்கம் அறிவித்திருப்பதை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இந்தியாவில் புலிகள் தலைதூக்க முயல்வதாக புலனாய்வுப் பிரிவுகள் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்பொழுது அங்கு புலி முகாம்கள் கிடையாது என மறுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார்.
ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.
இந்தியாவில் புலிகளின் மூன்று முகாம்கள் இருப்பதாக பிரதமர் தி. மு. ஜயரத்ன பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால் இதனை இந்தியா மறுத்திருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
மேற்படி விவகாரம் தொடர்பில் பிரதமர் ஜயரட்ன தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் புலி முகாம்கள் கிடையாது என இந்தியா மறுத்திருப்பது முக்கிய விடயமாகும். ஏனென்றால், இதற்கு முன் புலிகளின் முகாம்கள் இந்தியாவில் இருந்தன.
அமைச்சர் விமல் வீரவன்ச கூறியதாவது,
இந்தியாவில் புலிகள் இருப்பதாக இந்தியா கூறியிருந்தது பிரதமரை கொல்ல அவை பயிற்சி செய்து வருவதாகவும் புலனாய்வுப் பிரிவு கூறியது. அங்கு புலிகளின் முகாம் இல்லாத போதும் புலிகள் உள்ளனர் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக