12 மார்ச், 2011

இந்நாட்டின் இராணுவ, அரச அதிகாரிகள் வெளிநாட்டவரால் விசாரிக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்: ஜனாதிபதி

எமது நாட்டின் இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் வெளிநாட்டவரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.

எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினாலேயே இடம்பெற வேண்டும்.

அத்துடன் நாட்டையும் அதன் இறைமையையும் பாதுகாப்பதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதனை காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

நாட்டு மக்களுடனான ஜனாதிபதியின் நேரடி சந்திப்பு நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது. இதன்போது வவுனியா, பசறை, யாப்பஹூவ, கட்டான, உடநுவர, பொலன்னறுவை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த பொது மக்கள் செய்மதி தொழிநுட்ப வசதியினூடாக ஜனாதிபதியிடம் நேரடியாக தமது பிரச்சினைகளை தெரிவித்து கேள்விகளையும் எழுப்பினர்.

அவர் இதற்கான பதில்களை அளித்தார். இதன்போது கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக