22 பிப்ரவரி, 2011

சமூக பாதுகாப்பு கொள்கைக்கு இலங்கை முன்னுரிமை


பிராந்திய நாடுகளுக்கிடையிலான சமூக பாதுகாப்பு கொள்கைகளுக்காக இலங்கை வழங்கும் முன்னுரிமை காரணமாக நாட்டுக்கு சிறந்த பயன் கிடைத்துள்ளதாக பிரதமர் தி. மு. ஜயரட்ன கூறியுள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கும் மேலான சமூக பாதுகாப்பு கொள்கையை வகுப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு நன்மை பயப்பதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

தெற்காசிய வலய நாடுகளுக்கிடையிலான சமூக பாதுகாப்புக் கொள்கை தொடர்பான அமைச்சு மட்ட மாநாடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் பிரதமர் தி. மு. ஜயரட்ன தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் சமூக பாதுகாப்பு கொள்கை எவ்வாறு செயற்படுகிறது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் விளக்கிக் கூற விரும்புவதாக குறிப்பிட்ட பிரதமர், இவ்வாறான சமூகப்பாதுகாப்பு கொள்கைகளில் ஒரு சில முழு நாட்டையும் இலக்காகக் கொண்டு செயற்படுவதாகக் கூறினார்.

குறிப்பாக இலங்கையில் வறியோர் மற்றும் செல்வந் தர்களுக்கிடையிலான இடைவெளியை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. உதாரணத்துக்கு கூறுவதானால் இலவச கல்வித் திட்டம் நாட்டில் அறி முகப்படுத்தப்பட்ட கடந்த 63 வருடங்களில் நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் அதிகரித்துள்ளது.

அத்துடன் குறைந்த வருமானம் பெறும் கிராமப்புற குடும்பங்களில் உள்ள பிள்ளை களின் கல்வி செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலவச பகலுணவு, சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சமுர்த்தி நிவாரண திட்டமும் இதில் குறிப்பிட வேண்டும். இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு தொழில்முறை வழிகாட்டல்களை வழங்க வும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமுர்த்தி நிவாரணத்திட்டத்தின் மூலம் 15 இலட்சம் குடும்பங்கள் நன்மை பெறுவது குறிப்பிடத்தக்கது என்று பிரத மர் அங்கு கூறினார்.

இன்று 22ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த மாநாட் டில் தெற்காசிய வலய நாடுகளுக்கிடையே நிலவும் சமூக பாதுகாப்பு கொள்கை தொடர் பான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படு வதுடன் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப் படும். யுனெஸ்கோ அமைப்பின் சமூக மற்றும் மனித விஞ்ஞான செயற்பாடுகளுக் கான உதவிப் பணிப்பாளர் நாயகம் பிலர் அல்பர்ஸ், லேஸோ, சமூக சேவை கள் பிரதி அமைச்சர் சந்திரசிரி சூரியாரச்சி, சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் யமுனா சித்ராங்கனி ஆகியோர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக