22 பிப்ரவரி, 2011

அரசியல் நெருக்கடி நிலை பஹ்ரைனுக்கு தொழிலுக்கு செல்ல தற்காலிக தடை



பஹ்ரைன் நாட்டுக்கு இலங்கையர் வேலைவாய்ப்பிற்காக செல்வதற்கு தற்காலிக தடைவிதித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று கூறியது.

அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பணியக உயரதிகாரி ஒருவர் கூறினார். பஹ்ரைன் நாட்டில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. பஹ்ரைனில் சுமார் 40 ஆயிரம் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். 2009 ஆம் ஆண்டில் மாத்திரம் 5929 பேர் தொழில் வாய்ப்பு பெற்று அங்கு சென்றனர்.

அங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் இலங்கையர் எவரும் கலந்து கொள்ள வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே கேட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களினால் இலங்கையருக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அமைச்சு கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக