இந்தியாவில் எஞ்சியுள்ள 73 இலங்கை மீனவர்களையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு நேற்று தெரிவித்தது.
இதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேற்கொண்டுள்ளதாகவும் 73 மீனவர்கள் மற்றும் 16 மீன்பிடி படகுகளையும் விரைவில் இலங்கைக்கு கொண்டு வர முடியும் எனவும் அமைச்சு நம்பிக்கை தெரிவித்தது.
இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினை அண்மைக் காலமாக பூதாகாரமெடுத்த போதும் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் புரிந்துணர்வு அடிப்படையில் அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு பெறப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் பெருமளவில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தொடர்ச்சியாக நிலவும் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகை யில் இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.
அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான மீனவர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர். தற்போது எஞ்சியுள்ள 73 மீனவர்களையும் 16 மீன்பிடிப் படகு களையும் இலங்கைக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக