இலங்கையர்கள் 10,000 பேருக்கு ஆங்கில தொலைக்கல்வியை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.
உயர்கல்வித் துறையில் 30,000 பேருக்கு ஆங்கில மொழிப் பயிற்சியை வழங்குவதே தமது இலக்கு என குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த வருடத்திற்குள் 20,000 பேருக்கு இம் மொழிப் பயிற்சியை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவற்றில் 10,000 பேருக்குத் தொலைக்கல்வியாக ஆங்கில மொழிப் பயிற்சியை அமெரிக்கா வழங்குமெனத் தெரிவித்த அமைச்சர், ஒருவருட காலத்திற்கு இதற்கான நிதியினையும் அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய பிரதேச ஊடகவியலா ளர்கள் பங்கேற்கும் இலத்திரனியல் ஊடக செயலமர்வு நேற்று கொழும்பு நாரஹேன் பிட்டியிலுள்ள தேசிய தொலைக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் நடை பெற்ற மேற்படி செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
தகவல் ஊடக அமைச்சு, உயர் கல்வியமைச்சு, அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள் துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது: பிரதேச ஊடகவியலாளர்க ளின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையிலேயே இச் செய லமர்வு நடத்தப்படுகிறது. இச்செயலமர்வில் நாடளாவிய ரீதியில் 20 மத்திய நிலையங்களிலிருந்து 500ற்கும் மேற்பட்ட பிரதேச ஊடகவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.
எதிர்காலத்தில் 300 கிராமப்புற பாடசா லைகளுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அதேவேளை உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் க. பொ. த. உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் தமது அறிவையும் அனுபவத்தையும் மேம்படுத்திக்கொண்டு உலகளவில் முன்னேறுவதற்கு முன்னிற்க வேண்டும். உலகின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலமுள்ளவர்களாக பல்துறை சார்ந்தவர்கள் திகழ்ந்துள்ளனர். இப்போது கற்றவர்களே அதற்குப் பொருத்தமானவர்கள். உலகின் மொழிகளைக் கற்று தகவல் தொழில்நுட்பத்தினூடாக முன்னேற்றமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியம் எனவும் அமைச்சர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக