2 பிப்ரவரி, 2011

தேசத்துக்கு மகுடம் கண்காட்சி முன்னாள் புலி உறுப்பினர்களின் கைப்பணி பொருட்கள் காட்சிக்கு


மொனராகலை மாவட்டத்திலுள்ள புத்தலயில் இம்முறை நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களினால் தயாரிக்கப்பட்ட கைப்பணி பொருட்கள் காட்சி கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான கைப்பணி பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளதுடன் விற்பனை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

கைப்பணி பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கப்பெறும் பணத்தின் ஒரு பகுதியை கைப்பணி பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருளின் செலவுக்கு எடுக்கப்படவுள் ளதுடன் எஞ்சிய தொகை உற்பத்திகளை செய்த புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களு க்கும் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். புனர்வாழ்வு வழ ங்கப்பட்டவர்களின் கைப்பணி பொருட்கள் இவ்வாறு காட்சிக்கு வைப்பது அவர்களது எதிர்கால நடவடிக்கைகளுக்கு சிறந்த சந் தர்ப்பமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

சகல புனர்வாழ்வு நிலையங்களைச் சேர்ந்தவர்களின் கைப்பணிப் பொருட்களும் இந்த கண்காட்சியின் போது காட்சிக்கு வைக்கவும், விற்பனை செய்யவும் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காடசி எதிர்வரும் 4ம் திகதி புத்தலயில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இம்மாதம் 4ம் திகதி ஆரம்பமாகவுள்ள இக்கண்காட்சி எதிர்வரும் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக