2 பிப்ரவரி, 2011

132 செ.மீ. அகலம்; 30 செ.மீ. உயரம் மிகப் பெரிய முத்திரை இன்று வெளியீடு



இலங்கையில் பயன்படுத்தப்படும் நிலக்கரி மூலம் இயங்கும் வைஸ்ரோய் ரயிலுக்கு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று மிகப்பெரிய முத்திரையொன்று வெளியிடப்பட உள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு கூறியது. 132 சென்றிமீற்றர் அகலமும் 30 சென்றி மீற்றர் உயரமும் கொண்ட இந்த முத்திரை இலங்கையில் வெளியிடப்படும் மிகப்பெரிய முத்திரையாகும்.

வைஸ்ரோய் ரயிலின் புகைப்படத்தை தாங்கிய முத்திரையுடன் மேலும் 3 முத்திரைகளும் அன்றைய தினம் வெளியிடப்பட உள்ளன. இலங்கையில் வைஸ்ரோய் ரயில் சுற்றுலாப் பயணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முத்திரை வெளியீட்டு விழாவுக்கு வருகை தரும் அமைச்சர்களும் மேற்படி வைஸ்ரோய் ரயில் மூலம் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரம்புக்கனை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். முத்திரை வெளியிடும் வைபவம் ரம்புக்கனை ரயில் நிலையத்தில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக