7 ஜூன், 2011

பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சருடன் அமைச்சர் பீரிஸ் சிங்கப்பூரில் பேச்சு

சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் ஏனைய பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் நடைபெற்ற 10 ஆவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டே வெளிவிவகார அமைச்சர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் ஆயுத பாதுகாப்பு சவால்கள் எனும் தலைப்பில் அமைச்சர் பீரிஸ் உரையாற்றியிருந்தார்.

பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சருடனான இந்த சந்திப்பின் போது கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டி.டபிள்யூ. ஏ.எஸ். திசாநாயக்கவும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ரஷ்யாவின் பிரதி பிரதமர் சேர்ஜி இவனவ்வுடனும் இருதரப்பு பேச்சு நடத்தியுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக