7 ஜூன், 2011

இலங்கையில் கடற்படைத்தளங்களை அமைப்பதற்கு சீனா முயற்சிக்கவில்லை: லியாங்

இந்தியாவுக்கு அண்மையாகவுள்ள நாடுகளில் சீனா கடற்படை தளங்களை அமைக்க முயற்சிக்கின்றது என்ற கருத்தை சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவான்கிலி மறுத்தார்.

10 ஆவது ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டின் ஒரு கூட்டத்தில் பாகிஸ்தானில் குவாடர் என்னும் இடத்திலும் இலங்கையின் ஒரு துறைமுகத்திலும் கடற்படைத் தளங்களை அமைக்க முயல்கின்றது என்ற அபிப்பிராயத்தை அவர் மறுத்தார்.

தென்னாசிய பிராந்தியத்திலும் இந்து சமுத்திரத்திலும் சீனாவின் முக்கிய கவனம் எதிலுள்ளது எனக் கூறுமாறு இந்திய அரசியல்வாதியொருவர் கேட்டபோது அது சீனாவின் இறைமை, ஸ்திரத்தன்மை, அரசாங்க முறைமை என்பவை தொடர்பானவை எனக் கூறினார்.

சீனா இப்போது சோஷலிஸ் முறையை பின்பற்றுகின்றது. இந்தப்பாதையில் தலையிடும் எதுவும் சீனாவின் நலனை பாதிப்பதாகும். சீனாவின் எந்தவொரு பகுதியையும் சீனாவிடமிருந்து பிரிக்கும் முயற்சிக்கும் ஆதரவளிப்பதும் சீனாவின் நலனை பாதிப்பதாகும். சீனாவின் பொருளாதார சமூக அபிவிருத்தியில் தலையிடும் எதுவும் சீனாவில் நலனில் தலையிடுவதாகும் என அவர் கூறினார்.

நாம் பொருளாதார வளர்ச்சியில் பிரதான கவனம் செலுத்துகின்றோம். இராணுவத்தை முன்னேற்றுவதற்கு எமது வளங்களில் சிறிதளவை பயன்படுத்துகின்றோம் என சீன பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக