7 ஜூன், 2011

இலங்கையின் பாதுகாப்புக்கு சீனா வழங்கிவரும் ஆதரவு பாராட்டத்தக்கது: பிரதமர்

இலங்கைக்கு சீனா அளித்துவரும் உதவிகளுக்கு பிரதமர் டி.எம். ஜயரட்ண நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு, இறையாண்மை என்பவற்றுக்கு சீனா வழங்கும் ஆதரவினையும் அவர் வரவேற்றுள்ளார்.

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று முன்தினம் சீன மன்றத்தின் தலைவர் டாய் பின்ங்கோவை சந்தித்து பேச்சுவக்ஷிர்த்தை நடத்தியுள்ளார். சீனாவின் தென் மேற்கு பகுதியின் தலைநகரமான குயின் மிங்க் பகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் நடைமுறையிலான சிறந்த ஒத்துழைப்பு காணப்படுவதாக சீன மன்றத் தலைவர் டாய் பின்ங்கோ பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் இறையாண்மை ஆகியவற்றுக்கு சீனா வழங்கும் ஆதரவு பாராட்டத்தக்கதாகும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

குயின் மிங்க் பகுதியில் இடம்பெற்ற 19ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வின்போதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக