கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கை சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதிநிதி அவதானித்தார். பாராளுமன்ற ஒன்றியத்திலிருந்து வருகைதந்துள்ள மார்க் டியூரினேல் என்பவரே மேற்படிவழக்கை நேற்று திங்கட்கிழமை முதல் அவதானித்து வருகின்றார்.
வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் டியரல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற மேற்படிவழக்கின் பிரதிவாதியாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா குறிப்பிடப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை அவதானிப்பதற்காக நேற்றையதினம் அவர் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்கவினால் மன்றுக்கு அழைத்துவரப்பட்டார். மன்றில் ஊடகவியலாளர்களுக்கு அண்மையில் அவருக்கென தனியான கதிரைமேசையும் போடப்பட்டுள்ளது.
மன்றுக்குள் வருகைதந்தவுடன் பிரதிசொலிசிட்டர் ஜெனரல் புவனகே அலுவிஹார பிரதிவாதியின் சட்டத்தரணி நளீன் லது ஹெட்டியை அறிமுகம்செய்துவைத்தார். அதனை தொடர்ந்தே சட்டத்தரணி நளீன் லது ஹெட்டி அந்த பிரதிநிதிக்கு வழக்கின் பிரதிவாதியான சரத்பொன்சேகாவை அறிமுகம்செய்துவைத்தார்.
சரத்பொன்சேகாவும் அந்த பிரதிநிதியும் ஐந்தாறு நிமிடங்கள் ஏதோகதைத்துக்கொண்டிருந்ததுடன் வழக்கு விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டது. வழக்கின் வாதப்பிரதிவாதங்களை அவதானித்த அவர் ஏதே குறிப்பெடுத்துகொண்டக்ஷிர். இந்த வழக்கின் நேற்றைய விசாரணை நிறைவடைந்ததன் பின்னர் மன்றுக்குள் குழுமியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான டிரான் அலஸ் மற்றும் பாலித்த ரங்கேபண்டாரவுடன் ஏதோ கதைத்துவிட்டு மன்றின் பின்வாசல் வழியாகவே அவர் வெளியேறிவிட்டார்.
இதேவேளை வெள்ளைக்கொடி விவகார வழக்கில் பிரதிவாதி தரப்பின் இருசாட்சிகளையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதற்கு நீதிமன்ற அனுமதியளித்ததன் பின்னர்வழக்கின் 11 ஆம், 12 ஆம் சாட்சிகளுக்கு அழைப்பாøண விடுக்குமாறு பிரதிவாதியின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரிநின்றார்.
இந்த வழக்கின் 11 ஆவது சாட்சியாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ் விஜயசிங்கவும் 12 ஆவது சாட்சியாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக