10 ஜூன், 2011

தடுப்புக்காவலில் 839 புலிகள்: விசாரணைகள் ஆரம்பம்



யுத்தத்தின் பின்னர் கைதான 839 புலி உறுப்பினர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு இவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக ஆளுந் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வாய்மூல விடைக்காக அநுர குமார திசாநாயக்க எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் உறுப்பினர்களில் 2 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 839 புலி உறுப்பினர்களும் பூசா, கொழும்பு செயலக கட்டிட 6 ஆம் மாடி, வவுனியா பொலிஸ் தலைமையக கட்டிடம் என்பவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் புலிகள் அல்லாத சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படவில்லை.

ஆயுதம் ஏந்திய மேற்படி புலி உறுப்பினர்களின் தொகை குறை வடைந்துள்ளது. பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் மற்றும் தொழில்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். வட பகுதியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இவர்களின் வழக்கு விசாரணைகள் தமிழ்மொழி மூலம் விசாரிக்கப்படும். நீதி மன்றங்களுக்கு மாற்றுவீர்களா என எழுப்பப்பட்ட குறுக்கீட்டுக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், வழக்கு தீர்ப்புகள் தமிழில் விளக்கப்படுவதாகவும் தமிழ் மொழியில் பேசவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக