10 ஜூன், 2011

தமிழ்நாட்டு மக்களுக்கு பொய் கூறி குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றி கரமான அரசியல் பயணத்தில் பொறாமை கொண் டிருக்கும் எதிர்க்கட் சியைச் சேர்ந்த ஓரி ருவர் தமிழ் நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் பொய்களைக் கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக சுற்றாடல்துறை பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் நேற்றுத் தெரிவித்தார்.

இந்நாட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்து ஓரிருவர் அற்ப அரசியல் இலாபம் பெறும் நோக்கில் மேற்கொள்ளும் முயற்சிகளை தமிழ் நாட்டு முத லமைச்சரோ, தமிழ் நாட்டு மக்களோ ஒரு போதும் நம்ப மாட்டார்கள் என் றும் அவர் குறிப் பிட்டார்.

வெகுவிரையில் இந்தியாவின் தமிழ் நாட்டுக்குச் செல்லவிருக்கும் தாம் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறித்தும், இலங்கை அரசியல் நிலைமை தொடர்பான உண்மைகளையும் அவருக்கு எடுத்துக் கூறவிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; தமிழ்நாட்டு முதலமைச்சரான செல்வி ஜெயலலிதா எனது நல்ல அபிமானியாவார். முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆரின் காலம் முதல் அவரது அபிமானியாக நான் இருக்கின்றேன். தமிழ் நாட்டிலுள்ள எனது நண்பர்கள், வியாபார தோழர்கள், டொக்டர்கள் போன்றோருடன் அளவளாவும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முதலமைச்சர் ஜெயலலிதாவை மெச்சி பேசக் கூடியவனாக இருந்து வருகின்றேன். அவர் ஏழை எளிய மக்களின் உணர்வுகளை நன்குணர்ந்தவர்.

அதன் விளைவாகவே அவர் ஏழை எளியவர்களுக்கு பெரிதும் உதவக் கூடியவராகவும், அவர்களின் நலன்களில் அதிக அக்கறை செலுத்தக் கூடியவராகவும் திகழுகின்றார். அவரது வெற்றிக்காக நான் நல்வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம் இலங்கைப் பாராளுமன்றத்தில் தொடராக 23 வருடங்கள் உறுப்பினராக இருக்கின்றேன். இப்போது அரசில் சுற்றாடல் பிரதியமைச்சராகக் கடமையாற்றுகின்றேன்.

பயங்கரவாதம் காரணமாக கடந்த முப்பது வருடங்கள் நாமும் இந்த நாட்டு மக்களும் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்தோம். எங்கும் அச்சமும், பீதியும், அழிவுகளுமே தலை விரித்தாடியது. இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து இங்குவாழ்கின்ற சகல மக்களும் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தான் ஏற்படுத்தித் தந்திருக்கின்றார். இதன் பயனாக வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டு மக்களும் தமது அன்றாட பணிகளில் சுயமாகவும் நிம்மதியாகவும் ஈடுபடுகின்றார்கள்.

நான் இலங்கையில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றான முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன். இங்கு தமிழருக்கோ, முஸ்லிம்களுக்கோ எந்தப் பிரச்சினையுமே இல்லை. இங்கு வாழும் எல்லா சமூகத்தினரும் நட்புறவுடனும் புரிந்துணர்வுடனும்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நாட்டின் பெரும்பான்மையினர் நல்ல மக்கள். எனது தேர்தல் வெற்றிக்குக் கூட அதிக பங்களிப்பு நல்குகின்றனர். எமது ஜனாதிபதி இன, மத, பேதம் பாராதவர். அவர் எல்லா மக்களையும் சமமாக நோக்குபவர். அன்பாகப் பழகுபவர். இதனை சகலரும் அறிவர்.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்ததற்காக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மாத்திரமல்லாமல் முழு நாட்டு மக்களும் ஜனாதிபதியைப் பாராட்டுகின்றார்கள். அவருக்கு நன்றி தெரிவிக்கின்றார்கள்.

இப்படியான நிலையில் இலங்கையின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓரிருவர் தமிழ் நாட்டுக்குச் சென்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தமிழ் மக்களுக்கும் பொய்யான தகவல்களைக் கூறி அற்ப அரசியல் லாபம் தேட முயற்சி செய்கின்றனர். இவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வாறு செயல்படுகின்றனர். ஜனாதிபதியின் அரசியல் வெற்றிப் பயணத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத இவர்களின் காழ்ப்புணர்வுகளின் வெளிப்பாடே இவை.

இவர்களது பொய்களை தமிழ்நாட்டு முதலமைச்சரோ, அங்கு வாழும் மக்களோ ஒரு போதும் நம்ப மாட்டார்கள். இதனை நானறிவேன். நான் நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் நாட்டுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகின்றேன்.

அந்த மக்கள் நல்ல பண்பாளர்கள். இந்தியாவின் மக்கள் பிரதிநிதிகள் இங்கு வந்தால் அவர்களை வடக்கு கிழக்குக்கு அழைத்துச் செல்லவும் தயாராக உள்ளேன்.

எமது ஜனாதிபதிக்கும், தமிழ் நாட்டு முதலமைச்சருக்கும் இடையில் அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஓரிருவர் முயற்சி செய்கின்றனர். இம்முயற்சி ஒரு போதும் பலிக்காது. அம்முயற்சியைத் தோல்வியுறச் செய்ய உண்மைகளைக் கூறி சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம். இதற்கு ஒரு போதும் பின்நிற்க மாட்டோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக