5 மே, 2011

பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை இரவு அமெரிக்கப் படையினரால்


பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை இரவு அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் சடலத்தின் புகைப்படத்தை வெளியிடுவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார்.

கொடுரமான நிலையில் இருக்கும் சடலத்தை அப்படியே அப்பட்டமாகக் காட்டும் இந்தப் புகைப்படங்கள் வன்செயல்களுக்குத் தூண்டலாம் என்ற அச்சம் தனக்கு இருப்பதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை தங்களுக்குள் விவாதித்ததாகவும், தங்களிடமுள்ள புகைப்படத்தில் இருப்பது ஒசாமா தான் என்பதில் தாங்கள் தெளிவாக இருப்பதாகவும் டி என் ஏ மாதிரியின் சோதனை மூலமும் இது உறுதி செய்யப்பட்டிருப்பதால் ஒசாமா பின் லாடனை கொன்றுவிட்டோம் என்பதில் தங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என்றும் ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் தலையில் சுடப்பட்ட ஒருவரது சடலத்தின் கொடூரமான காட்சியை அப்பட்டமாகக் காண்பிக்கும் புகைப்படத்தை வெளியிடுவது என்பது ஒரு முக்கியமனா பிரச்சினை என்று கூறியுள்ள ஒபாமா, அதனை யாராவது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டால், அதனால் வன்செயல்கள் தூண்டப்படலாம் என்பதனையும் தாங்கள் கருத்தில் கொண்டதால் தான் அந்த புகைப்படங்களை வெளியிடவேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

ஆனால், பின்லாடனின் அல்கயீதா அமைப்பினரால், செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த போது நியூயார்க் நகரின் மேயராக இருந்த ரூடி ஜூயூலானி அவர்கள் அதிபர் ஒபாமாவின் கருத்துடன் முரண்படுகின்றார்.

என்றோ ஒருநாள் இந்த புகைப்படங்கள் எப்படியாவது வெளிவரத்தான் செய்யும் என்று கூறியுள்ள அவர் அப்படிப்பட்ட நிலையில் அவற்றை இப்போதே வெளியிடுவதுதான் சரி என்றும் தெரிவித்திருக்கிறார்.

இப்போது இந்த புகைப்படங்களை வெளியிட்டால் அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் அதன் தீவிரம் குறைந்து போகும் என்றும், இவற்றை வெளியிடுவதன்மூலம் பின் லாடனின் அடையாளத்தை உறுதிப்படுத்த நினைக்கும் ஆட்களையாவது திருப்திப்படுத்த முடியும் என்றும் ரூடி ஜூயூலானி கருத்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக இது ஆபத்தை ஏற்படுத்தினாலும் நீண்ட கால அளவில் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக