5 மே, 2011

புனர்வாழ்வு பெறும் முன்னாள் புலி உறுப்பினர்கள்;


வெளிநாட்டு தூதுவர்கள், ஐ. நா பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு செயலர் விளக்கமளிப்பு


புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் முன்னாள் புலி சந்தேக நபர்களுக்கு இலங்கை அரசு பாதுகாப்பு அமைச்சு ஊடாக முன்னெடுத்து வரும் புனர்வாழ்வு செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள்,ஐ.நா. பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு விளக்கமளித்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டிஷ், அவுஸ்திரேலியா, கனடா உட்பட 30 நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்களும், ஐ.நா, சர்வதேச செஞ்சிலுவை சங்கம், உலக உணவு தாபனம் உட்பட இலங்கையிலுள்ள வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களுக்கு இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சு புனர்வாழ் திணைக்களம் வழங்கிவரும் முழுமையான வசதிகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் விளக்க மளித்துள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் முறை அவர்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான முழுமையான விபரங்களை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க இங்கு விவரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக