5 மே, 2011

பாகிஸ்தானை தனிமைப்படுத்தி பயங்கரவாதிகளை பலப்படுத்தாதீர்

சர்வதேசத்திடம் பாகிஸ்தான் பிரதமர் வேண்டுகோள்

பயங்கரவாதத்திற்கெதிரான போரில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தாது அனைத்து நாடுகளும் உதவ வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானி தெரிவித்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதியை பாரிஸில் சந்தித்த கிலானி இந்த வேண்டுகோளை விடுத்தார். ஒஸாமா பின்லேடன் கொலை செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தானில் மிக மோசமான தாக்குதல்களை நடத்த அல்கைதா தலிபான் அமைப்புகள் தயாராகின்றன. இந்தப் பயங்கர பழிவாங்கும் தாக்குதலை கூட்டாக இணைந்தே முறியடிக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்பது பாகிஸ்தானின் தோள்களில் மட்டும் சுமத்தப்படக் கூடாது. தேவையற்ற சந்தேகங்களைக் கொண்டு நேச அணியிலிருந்து அமெரிக்காவோ, ஐரோப்பாவோ விலகிச் செல்வது பயங்கரவாதிகளை பலப்படுத்தி விடும்.

பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதன் மூலம் எமது மண்ணில் பயங்கரவாதிகளை சுதந்திர புருஷர்களாக மாற்றிவிடாதீர்கள். எனவே எஞ்சியுள்ள அல்-கைதா பயங்கரவாதிகளையும், தலிபான் தீவிரவாதிகளையும் ஒளித்துக் கட்டவும் இவர்களின் மோசமான தாக்குதல்களிலிருந்து பாகிஸ்தானை பாதுகாக்கவும் நேட்டோ முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஒஸாமா பின்லேடனை பாகிஸ்தான் அரசாங்கமே இவ்வளவு காலமும் அடைக்கலம் கொடுத்த பாதுகாத்து வந்ததாக அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது. கடுமையான பாதுகாப்பை மீறி ஒஸாமா பின்லேடன் எவ்வாறு அபோடாபாத் வந்தார் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளதால் இஸ்லாபாத் வாஷிடன் உறவுகள் மோசமடைந்து செல்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக