1 மே, 2011

இலங்கை உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிட தேவை இல்லை: சீனா

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அந்த நாடும் இலங்கை மக்களுமே கையாள வேண்டும். இதனை விடுத்து இந்த விடயங்களில் சர்வதேசம் தலையிடக் கூடாது சீனா இன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் அரசினால் இழைக்கப்பட்டதாக கூறம் யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை குறித்துத் கருத்துத் தெரிவிக்கையிலேயே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரான ஹொங் லீ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை சீனா முழுமையாக அறிந்துள்ளது. இதேவேளை, இலங்கை அரசாங்கம் உள்ளுரில் ஆணைக் குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை உள்ளுர் மட்டத்தில் நடத்தி வருகிறது.

இந்த விடயங்களைச் இலங்கை அரசாங்கமும் அந்த நாட்டு மக்களும் கையாண்டு தீர்த்துக் கொள்வர் என நாம் நம்புகிறோம். ஆகவே, சர்வதேசம் இந்தப் பிரச்சினைகளில் தலையிடாது இலங்கையின் அபிவிருத்திக்குத் தேவையான பங்களிப்பை வழங்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக