1 மே, 2011

பிறந்த மண்ணுக்கு ஒரு துளி வியர்வை; நாட்டைக் காக்கும் மக்கள் அரண் அனைத்து மக்களும் ஓரணியில் திகழும் மேதினம்

உலகத்தில் வாழ்கின்ற வேலை செய்யும் மக்கள் மிக கோலாகலமாக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மேதின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தெற்காசிய நாடுகளுக்கிடையே சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உடன்பாடுகளை மிக உயர் மட்டத்தில் நடைமுறைப்படுத்திய நாடு என்ற வகையில் நாம் பெற்றுள்ள வரவேற்பை சர்வதேச தொழிலாளர் தினத்தில் பெருமையுடன் நினைவு கூருகின்றேன். அத்துடன் எமது நாட்டில் பொருளாதார வளர்ச்சியை நூற்றுக்கு எட்டு வீதம் உயர்த்துவதற்கு தமது உழைப்பை பயனுறுதி மிக்க வகையில் பயன்படுத்திய மக்களுக்கு மகத்துவம் மிக்க இந்நாளில் முதற்கண் எனது நன்றி உரித்தாகுக.

விபத்துக்களுக்குப் பலியாகின்ற ஊழியர்களுக்குச் செலுத்த வேண்டிய நட்டஈட்டுத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழிலாளர் நட்டஈட்டுக் கட்டளைச் சட்டமும் காலத்துகந்த வகையில் திருத்தப்பட்டுள்ளது. சிறுவர்களை உழைப்பாளிகளாக ஈடுபடுத்துவதை முற்றாக ஒழிப்பதற்கு உரிய சட்டங்களும் ஒழுங்கு விதிகளும் இயற்றப்பட்டுள்ளன. நமது பெண்மணிகள் நாட்டின் உழைப்போர் செயலணியில் தீவிரமாகப் பங்கேற்றுள்ளனர். ஆகவே அவர்களின் உரிமைகள், சிறப்புரிமைகள் தொடர்பாக சட்டங்களைப் பலப்படுத்த வேண்டியது நடைமுறைத் தேவையாகும். அது தொடர்பாக அரசு தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகின்றது.

இந்நாட்டில் வேலை செய்கின்ற மக்கள் எதிர்நோக்கிய மிகப் பெரிய சவால் பயங்கரவாதமாகும். பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்ய நாம் அடியெடுத்து வைத்தபோது இந்நாட்டில் வேலை செய்கின்ற மக்களிமிடருந்து கிடைத்த ஒத்துழைப்பு அதுபற்றி நமது நாட்டு தொழிலாளர்களிடம் இருந்த அறிவார்ந்த தன்மையை எடுத்துக் காட்டியது. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுகின்ற போது வேலை நிறுத்தங்களில் அல்லது எவ்வித நாசகார செயல்களிலும் நமது நாட்டு தொழிலாளர்கள் ஈடுபடவில்லை. பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்யும் பொருட்டு நமது நாட்டில் மக்கள் காட்டிய அர்ப்பணிப்பு பொறுமை என்பவை உலக தொழிலாளர்களுக்கே மாபெரும் கெளரவமாகும்.

நாம் தோல்வியுறச் செய்த பயங்கரவாதத்திற்கு உயிரூட்டுகின்ற சதி உலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பாரிய அர்ப்பணிப்புடனும் பொறுமையுடனும் பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்து மக்கள் பெற்ற வெற்றியைப் பறித்துக் கொள்ளும் செயலாகும். அந்த வெற்றியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்று வேலை செய்கின்ற மக்கள் ஒற்றுமையாக ஏந்திய ஆயுதம் பெரும் பொறுப்புடன் ஏந்தப்பட்டது என்பதை நான் அறிவேன்.

கடந்த காலத்திலிருந்து தொழிற் சங்கங்களும் அதன் தலைவர்களும் துணிச்சலுடன் பெற்றுக் கொண்ட ஊழியர்களின் உரிமைகளையும் தொழிற் சங்கங்களின் வெற்றியையும் காத்தக் கொள்ளுமுகமாக “பிறந்த மண்ணுக்கு ஒரு துளி வியர்வை, நாட்டைக் காக்கும் மக்கள் கோட்டை" என்ற தொனிப் பொருளுடன் இம்முறை அனைத்து வேலை செய்யும் மக்களும் ஒன்று சேர்வார்கள் என நான் நம்புகின்றேன்.

வேலை செய்கின்ற மக்களுக்கும் தொழிற் சங்க இயக்கங்களுக்கும் வெற்றி மேல் வெற்றி கிட்டுக எனப் பிரார்த்திக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக