3 பிப்ரவரி, 2011

தமிழக மீனவர் மீதான இந்திய அரசின் திடீர் அக்கறை தேர்தலுக்கான நாடகம்



தமிழக மீனவர்கள் மீதான இந்திய மத்திய அரசாங்கத்தின் திடீர் அக்கறையானது தேர்தலுக்கான நாடக அரங்கேற்றமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

இந்த நாடகத்தின் ஓர் அங்கமே நிருபமா ராவின் இலங்கை விஜயம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடருமானால் இலங்கையுடனான உறவுகள் பாதிக்கப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்திருப்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே டாக்டர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் இடம்பெறவுள்ளது. எனவே மீண்டும் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட வேண்டுமானால் தமிழகத்தின் வாக்குகள் அவசியமானதாகும். அதற்காகவே "மீனவப் பிரச்சினை' நாடகம் அரங்கேற்றப்படுகிறது.

மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் இங்கு விஜயம் செய்தார். இது போன்ற நாடகங்கள் தொடர்ந்தும் அரங்கேற்றப்படும். எனவே இவை தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. தேர்தல் முடிந்ததும் இவையனைத்து நாடக அரங்கேற்றங்களும் நின்றுவிடும்.

அதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. இது விடுதலைப் புலி ஆதரவாளர்களான வை கோ போன்றோரால் மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரங்களாகும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக