3 பிப்ரவரி, 2011

சேனநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறப்பு மக்கள் பீதி


இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் அணை உடைப்பெடுக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக அதன் ஐந்து வான் கதவுகள் நேற்றுக் காலை (02) திறந்துவிடப்பட்டன.

இங்கினியாகல பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள் ளது. இதனால், அணை உடைப்பெடுத்துப் பாரிய அனர்த்தம் ஏற்படுவதைத் தவிர்க்க வான் கதவுகள் அரையடி உயரத்திற்குத் திறக்கப்பட்டதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.

வான் கதவுகள் திறக்கப்படுவது குறித்து, அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு அறிவுறுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வான்கதவுகள் திறக்கப்படுவதால் கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, இங்கினியாகல, தமண ஆகிய பிரதேசங் களின் தாழ்ந்த பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகுமென எச்சரிக்கப்பட்டது.

வான்கதவுகள் திறக்கப்படும் செய்தி காட்டுத்தீ போல் பரவியதனால் நேற்று அம்பாறை மாவட்டத்தில் பதற்றமும், பீதியும் நிலவியது. பல பொலிஸ் நிலையங்களிலும் எச்சரிக்கை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இச் செய்தியால் பாடசா லைகள், அலுவலகங்கள் யாவும் காலை 9.30 மணியுடன் இழுத்து மூடப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடம் தேடிச் சென்றனர். சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் காலையில் 104 அடியாகக் காணப்பட்டது. அதனால் வான்கதவு திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, மாவடிப்பள்ளி கிட்டங்கி தாம்போதிகளில் மீண்டும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. போக்குவரத்து துண்டிக் கப்பட்டுள்ளது. மண்டூர் வெல்லாவெளி வீதியில் 3 தாம்போதிகளுக்கு மேல் 4 அடிவெள்ளம் பாய்கிறது. நவகிரி நீர்ப்பாசனக்குளம் திறந்துவிடப்பட்டதே காரணமாகும். அதனால் அப்பகுதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளநிலைமை படுமோசமாக மாறுகிறது. அடைமழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக