பருத்தித்துறை முனைக் கடற்கரையில் இராட்சத திமிங்கிலம் இறந்த நிலையில் நேற்று (திங்கள்) காலை 5.30 மணியளவில் கரை ஒதுங்கியது.
33 அடி நீளமும், 16 அடி சுற்று வட்ட மும் கொண்ட இத்திமிங்கிலத்தின் நிறை 5ஆயிரம் கிலோ தொடக்கம் 10 ஆயிரம் கிலோ வரை இருக்கலாம் என பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.
கரையில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் முருகைக் கற்பாறைக்குள் சிக்குண்ட நிலையில் இருக்கும் திமிங்கிலத்தை மீட்க பருத்தித்துறை பொலிசார் பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளனர்.
பெருந்திரளான பொதுமக்கள் கரை யொதுங்கிய திமிங்கிலத்தை பார்த்துச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக