1 பிப்ரவரி, 2011

தமிழக மீனவர் மீதான தாக்குதல் பின்னணியை இலங்கை ஆராயும் நிருபமாராவுக்கு அதிகாரிகள் விளக்கம்





இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நிருபமாராவ் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் சி. ஆர். ஜெயசிங்கவையும் சந்தித்திருந்தார்.

இச்சந்திப்பின் போதே இந்திய மீனவர்களின் படுகொலை குறித்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற வேண்டு கோளை அவர் முன்வைத்திருந்தார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

திசைமாறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்கள் உட்பட அனைத்து மீனவர்களையும் மனிதாபிமா னத்துடன் நடத்தும் கொள்கையையே இலங்கை கொண்டிருப்பதாக நிருப மாராவுக்கு விளக்கமளித்த இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு நாடுக ளுக்குமிடையில் இருதரப்பு உறவுகளைப் பேணிவரும் நிலையில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்தும். எனவே, இச்சம்பவத்தின் பின்னணியினை இலங்கை அரசாங்கம் ஆராயும் என்றும் நிருபமாராவுக்கு இலங்கை அதிகாரிகள் கூறியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்கின்ற அதேநேரம் இந்தியத் தரப்பிலிருந்தும் தகவல்களை வழங்குமாறு இலங்கை அதிகாரிகள் கேட்டுக் கொண் டுள்ளனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த விவகாரத்தில் பலாத்காரத்தை பயன்படுத்துவது நியாயமற்றதென இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லையை மீறும் மீனவர்கள் குறித்து 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் திகதி மீன்பிடி தொடர்பான இணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு அமைய நடத்தப்பட வேண்டும் என்பதையும் இரு தரப்பும் சுட்டிக்காட்டியிருந்ததாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரி வித்துள்ளது.

மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டும் தறுவாய்களில் செயற்பா டாகக் கூடிய நடைமுறை ஒழுங்கு களையிட்டு 2008 ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மீன் பிடித்தல் ஒழுங்குகள் சம்பந்தமான இணைந்த அறிக்கையானது இப்படி யான நிகழ்வுகளைக் குறைத்துள்ளது.

அபாயமின்மையையும் பாதுகாப் பையும் வலுப்படுத்தும் பொருட்டு தற்போது நடைபெற்ற சம்பவங்க ளின் அடிப்படையில் நடைமுறைப் படுத்த வேண்டிய ஒழுங்குகளை யிட்டுப் பேச்சுவார்த்தை நடத்து வதன் அவசியத்தையிட்டு அவர்கள் இணக்கம் கண்டனர்.

இதன்படி மீன்பிடி சம்பந்தமான அடுத்த இணைந்த செயலமர்வுக் கூட்டத்தை விரைவில் கூட்டுவ தற்கும் இரு பகுதியினரினதும் மீன் பிடித்தல் சம்பந்தமான பிரச்சினை கள் பலவற்றை இது ஆராயு மெனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இணைந்த செயலமர்வுக் குழு வானது மீன்வளத்துறையின் அபிவி ருத்தி மற்றும் ஒத்துழைப் பிற்காகப் பிரேரணையில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தையிட்டும் ஆராயும்.

இரு நாட்டினதும் மீனவர்களின் சபைகளுக்கிடையேயும் தொடர் பாடல்களை விரிவாக்கம் செய்யவும் ஊக்குவிப்பதற்கும் தீர்மானிக்கப் பட்டது.

இப்படியான தொடர்புகள் இரு பகுதியினருக்கும் பரஸ்பர நன்மை பயப்பதை உறுதியாக் கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக