1 பிப்ரவரி, 2011

அரசுக்கு எதிராக 9ஆம் திகதி கொழும்பில் மாபெரும் பேரணி

அரசாங்கத்தின் சர்வதிகார ஆட்சியை எதிர்த்தும் சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளதாக ஐ.தே.க அறிவித்தது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அக்கட்சி அழைப்பு விடுத்தது.

கொழும்பில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஐ.தே கட்சி எம்.பி. மங்களசமரவீர இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் எதிர்வரும் 9ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு லிப்ரன் சுற்று வட்டத்தில் இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் சரத்பொன்சேகாவை பலாத்காரமாக கடத்திய நாளாகும். ஊடக அடக்குமுறை சர்வதிகார ஆட்சி வடக்கு, கிழக்கில் மக்கள் கடத்தப்படுதல் காணாமல் போதல் கொலைகள் மற்றும் கொழும்பில் வீடுகள் நிர்மூலமாக்கப்படுதல் உட்பட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு சரத்பொன்சேகாவின் விடுதலை போன்ற விடயங்களை முன்னிறுத்தியே இப்பேரணி நடைபெறவுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக