1 பிப்ரவரி, 2011

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை மட்டு., திருமலையில் வெள்ள அபாயம் நிரம்பி வழியும் நிலையில் 29 குளங்கள்






வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையை அடுத்து கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் 29 குளங்கள் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்தது. பாரிய வெள்ளத்தின் பின் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்த கிழக்கு மக்கள் தொடர் மழையினால் மீண்டும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுப்பதற்கான சகல முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் தினகரனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் அரச அதிபர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு அருகில் கிழக்கே மீண்டும் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகவே வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, ஊவா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக கால நிலை அவதான நிலையம் கூறியது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று காலை 8.00 மணியுடன் முடி வடைந்த 24 மணி நேரத்தில் திருகோண மலையில் 92.8 மி. மீ. உம் வவுனியாவில் 92.0 மி. மீ. உம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

தொடர் மழையினால் நாட்டிலுள்ள 59 குளங்களில் 58 குளங்களின் நீர் மட்டம் 75 வீதத்தை விட அதிகரித்துள்ள தாக நீர்ப்பாசனத் திணைக்கள நீர்வள முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார்.

திருகோணமலையில் 3 குளங்களும் பொலன்னறுவையில் 4 குளங்களும் அநுராதபுரத்தில் 8 குளங்களும் குருணாகலை யில் 8 குளங்களும் பதுளையில் 4 குளங் களும் வவுனியாவில் இரு குளங்களும் நிரம்பி வழிவதாகவும் அவர் தெரிவித்தார். பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவு களும் கவுடுல்ல அணைக்கட்டின் 8 வான் கதவுகளும் ராஜாங்கனை அணைக் கட்டின் 2 வான் கதவுகளும் மின்னேரிய குளத்தின் 7 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 362 பேர் பாதிக்கப்பட்டு மூன்று முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெருகலில் 5 குடும்பங்களும் தம்பலகாமத் தில் 19 குடும்பங்களும் குச்சவெளியில் 50 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது.

பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான சகல உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரவீர கூறினார்.



திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் வயல்கள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளதுடன் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள சுமார் 3500 ஏக்கர் நெல் வயல்கள் (அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த) கைவிடக் கூடிய நிலையில் இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களை விட இம்முறை விவசாயிகள் எதிர்பார்த்தது போல நல்ல விளைச்சல் கிடைக்கக் கூடியதாக இருந்தும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல் வயல்களை அறுவடை செய்ய முடியாதுள்ளதாகவும் நீரில் மூழ்கியுள்ளதாலும் விவசாயிகள் நெல் வயல்களை கைவிட வேண்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.



மூதூர் பிரதேசத்தில் கடந்த இரு தினங்களாக மீண்டும் அடை மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.

இதனால் வெள்ளம் காரணமாக இடம் பெயர்ந்து மீண்டும் சொந்த இருப்பிடம் திரும்பிய பல நூற்றுக்கணக்க ண்ன குடும்பங்களும் பெரும் சிரமம டைந்துள்ளனர்.

அகதி முகாம்களிலும், உறவினர் இல் லங்களிலும் தங்கியிருந்த அனைத்து மக்களும் தமது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர். தொடர்ந்தும் மழை பெய்வதினால் மழை நீர் தேங்கி நிற்கின்றது.



மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் அடை மழை பெய்து வருகின்றது. கடந்த வெள்ள அனர்த்தங்களின் பின்பு தமது சொந்த இடங்களுக்கு மீளச் சென்ற பாதிக்கப்பட்ட பொது மக்கள் மீண்டும் பாதிக்கப்பட வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ் அடை மழை காரணமாக மட்டு – மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, காவத்த முனை, பிறைந்துரைச்சேனை, மாவடிச் சேனை, செம்மண்ஓடை கிராமங்கள் மீளவும் வெள்ள நிலையை எதிர்கொண் டுள்ளன.

இப் பிரதேச வீதிகளனைத்தும் நீரில் மூழ்கியுள்ளதுடன், வெட்டப்பட்ட வடிகான்களை மக்கள் மூடியுள்ளதால் இவற்றை மீண்டும் வெட்டி நீரை வெளியேற்ற வேண்டி ஏற்பட்டுள்ளது. அத்தோடு இம்மழையினால் பாடசாலை களும் பாதிக்கப்பட்டுள்ளன.


பதுளை மாவட்டத்திலும் தொடர்ந்து பெரு மழை பெய்து வருவதினால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக

மாவட்டத்தின் ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் அனைத்தும் நீர் நிறைந்து, வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால், ஆறுகளை, நீர் நிலைகளை, மலைப் பகுதிகளை அண்மித்து வாழ்ந்து வரும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படியும், அபாயம் ஏற்படும் இடங்களிலி ருந்து மக்களை வெளியேறும்படியும் பதுளை மாவட்ட அரச அதிபர் ரோகனகீர்த்தி திசாநாயக்க கேட்டுள்ளார்.

மேலும் பதுளை மாவட்டத்தில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளன.



திருகோணமலையில் பெய்து வரும் அடை மழை காரணமாக திருகோணமலை, லவ்லேன், பாளத்தோட்டம், கேணியடி, துளசிபுரம், மட்டிக்களி, குச்சிவெளி, அடம்போடை, காசிம்நகர், 2ம் வட்டாரம், இறக்கக்கண்டி, வாழையூற்று, இக்பால் நகர், கோபாலபுரம் ஆகிய தாழ் நிலங் களில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளம் காரணமாக பாதிக் கப்பட்டு தப்பிப் பிழைத்த வேளாண்மைகள் அறுவடை செய்தவர்கள் இம்மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக