31 டிசம்பர், 2010

ஒழுக்காற்று விசாரணை செலவினத்தை சம்பளத்திலிருந்து அறவிடத் திட்டம்


அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒழுங்காற்று விசாரணைகளுக்கு ஏற்படும் செலவீனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது அதற்கு ஏற்படும் செலவீனங்களை இதுவரை அரசாங்கமே ஏற்றுக்கொண்டு வருகிறது.

இனிவரும் காலங்களில் அரசாங்க அதிகாரி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெற்று அதில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவரின் சம்பளத்திலிருந்து 25 வீதத்தை அல்லது 30,000 ரூபாவை அறிவிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

நிர்வாகக் கட்டமைப்புக்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட உபகுழுவின் பரிந்துரைக்கு அமையவே இத்திட்டம் அமுல்படுத் தப்படவுள்ளது. 30 ஆயிரம் ரூபா அல்லது 25 வீதத்தில் எது குறைவானதோ அத்தொகை 24ற்கு மேற்படாத தவணைகளில் அறவிடப்படவுள்ளது. அது மாத்திரமன்றி இழைத்த குற்றத்துக்கான தண்டனையும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2011ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதற்கு அமைய அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து 600 ரூபா மாதாந்தம் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படவிருக்கின்றது.

இதேவேளை ஓய்வூதியம் பெறுபவர்களு க்கு மாதாந்தம் 300 ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக