31 டிசம்பர், 2010

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க ஐ.நா. நிபுணர் குழுவுக்கு இலங்கைக்குள் அனுமதி

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம ளிப்பதற்கு ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு இலங்கைக்குள் வர அனுமதிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்தார்.

அரசாகத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற் கண்டவாறு கூறினார்.

அணிசேராக் கொள்கையென்ற இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்கள்

குறித்து விசாரிப்பதற்கே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாய கம் பான்கீ மூனால் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதற்கு இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.

இறைமையுள்ள நாடென்ற வகை யில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படாது.

இதன் அடிப்படையிலேயே ஐ.நா. நிபுணர்கள் குழு இலங் கைக்கு வந்து விசாரணைகளை நடத்த முடியாது என அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால் தற்பொழுது நிலைமை மாறியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக் கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு ஐ.நா. நிபுணர்கள் குழு தனது விரு ப்பத்தைத் தெரிவித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவின் முன்னி லையில் யாரும் சாட்சியமளிக்க முடியும் என்பதன் அடிப்படையில் ஐ.நா. நிபுணர்கள் குழுவும் இலங் கைக்கு வந்து ஆணைக்குழு முன் சாட்சி யமளிக்க விரும்பினால் அதற்கு அரசாங்கம் வீசா அனுமதி வழங்கும். உத்தியோகபூர்வமாக அனுமதி கோர ப்பட்டால் அதற்கு நிபுணர்கள் குழு வுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கும்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்னி லையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலர் சாட்சியமளித்து ள்ளனர். அரசாங்கம் ஜனநாயகத் துக்கு வழிவகுத்துள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இதன் அடிப்படையில் ஐ.நா. நிபுணர்களும் சாட்சியமளிக்க முடியும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

அதேநேரம், உள்ளூராட்சி சபை கள் சிலவற்றில் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டங்கள் எதிர்க் கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டமை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமை ச்சர், நாட்டில் ஜனநாயகம் கடைப் பிடிக்கப்படுகிறது என்பதை இச் சம்பவம் எடுத்துக் காட்டுவதாகவும் இவ்வாறான சம்பவங்கள் கூறும் செய்தியை கட்சியின் தலைமைப் பீடம் கவனத்தில் எடுக்கும் என்றும் கூறினார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 22 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இக்கட்சிக ளின் பிரதிநிதிகள் கூறும் கருத்துக்கள் கட்சிகளுக்கிடையில் தீர்த்துக்கொள் ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக