31 டிசம்பர், 2010

10 விமானங்களுடன் ஆரம்பித்து 60 வது ஆண்டை பூர்த்தி செய்யும் இலங்கை விமானப்படையிடம் 110 விமானங்கள்


பத்து விமானங்களுடன் தனது சேவையை ஆரம்பித்த இலங்கை விமானப்படை 60 வது ஆண்டை பூர்த்தி செய்யும் நிலையில் 110 விமானங்கள், ஹெலிகொப்டர்களுடன் வீரநடை போடுவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும், விமானப்படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தெரிவித்தார்.

ஆரம்பத்தில் மொத்தமாகவே 1200 இராணுவ வீரர்கள் இருந்ததாக தெரிவித்த அவர் தற்பொழுது அதிகாரிகள் மாத்திரம் 1400 பேர் உள்ளதாக மேலும் தெரித்தார்.

இலங்கை விமானப் படையின் 60 வது ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி கொண்டாடப்பட வுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள விமானப் படை தலைமையகத்தில் நேற்று இடம் பெற்றது.

மானப் படைத் தளபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்,

விமானப்படை கடந்த 60 ஆண்டு காலம் தாய்நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் பாரிய சேவைகளை வழங்கியுள்ளது. எந்த ஒரு நிலைமைக்கும் முகம் கொடுக்கும் வகையில் எல்லா நிலைமைகளிலும் தயாராகவே விமானப்படை செயற்பட்டு வந்தது.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் போதும், இயற்கை அனர்த்தங்களின் போதும் விமானப்படை கடந்த காலங்களில் பாரிய ஒத்துழைப்பையும், சேவைகளையும் வழங்கியுள்ளது. எமது இந்த செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஊடகங்களின் பங்களிப்பும் மிக முக்கிய மானது. இதற் காக சகல ஊடகங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இந்தியா உட்பட வெளிநாடுகளின் விமானப் படைகளும் 60 வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கு கொள்ளவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக