கொழும்பு கொம்பனித் தெரு வாழ் குடியிருப் பாளர்களுக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்ப டமாட்டாது. அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு என்றே அரசாங்கம் பல திட்டங்களை தீட்டியுள்ளது. ஆகவே கொம்பனித் தெருவில் பள்ளிகள், மத்ராஸாக்கள் அகற்றப்படும், மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்ற விஷமத்தனமான பிரசுரங்களை சிலர் தமது சொந்த அரசியல் நோக்கத்துக்காக பொய்ப்பிரசாரம் செய்து வருகின்றனர். இதனை நம்பி கொம்பனித் தெரு வாழ் மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டியதில்லை.
கொம்பனித்தெரு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்த குழுவினருக்கு மேற்கண்டவாறு உறுதி அளித்தார்.
விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வுகள் பிரதி அமைச்சர் எம். பயிஸார் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச். எம். அஸ்வர், அல்ஹாஜ் அஹ்கம் உவைஸ் ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரை அவருடைய செயலகத்தில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொம்பனிதெரு பகுதியில் மதுபான விற்பனை நிலையம் உட்பட்ட ஒரு சிறிய பகுதி மட்டும் கொழும்பு எதிர்கால மாதிரித் திட்டத்தை உருவாக்கு வதற்கென நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு வாழ்வோரின் சம்மதத்தை பெற்ற பின்னர் தான் இத்திட்டத்தை அமுல் செய்வோம். தனியார் துறையினர் முதலீட்டாளர்களின் உதவியுடனேயே இந்த அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றோம். இதனை ஊக்குவிக்கும் ஊக்குவிப்பாளர்களாக மட்டுமே அரசாங்கம் செயற்படும். இக் குறிப்பிட்ட பகுதியில் முஸ்லிம்களும், தமிழர்களும், சிங்களவர்களும் வாழ்கின்றனர்.
அரசாங்க ஊழியர்கள் வதியும் மிகவும் பழமை வாய்ந்த மாடி வீட்டுத் திட்டமும் இங்கு அமைந்துள்ளது. இது குறித்த விடயங்களை நாம் அவர்களுக்கு தெளிவுபடுத்தியபோது அங்கு வாழ் மக்களும் இணக்கம் தெரிவித்து ள்ளனர் என்று அவர் விளக்க மளித்தார்.
இந்த மாதிரித் திட்டம் வெற்றி யளித்தால் ஏனைய இடங்களிலும் மக்கள் வாழ்வதற்கு உரிய நவீன வீடு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க ப்படும்.
சேரி வாழ் மக்களுக்கும் சேரி வாழ்க்கை முறையை ஒழித்து அவர் களுக்குத் தகுந்த இருப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கப்படும்.
இந்த மாதிரியான அபிவிருத்தித் திட்டங்களை யாராவது எப்போ தாவது அமைத்துத்தான் ஆக வேண் டும்.
கொழும்பை எழில் மிக்க நகரமாக உருவாக்குவதற்கு நாம் பாரிய திட்டம் தீட்டியுள்ளோம். இப்படியான திட்டங்களை சென் னையில் ஆரம்பித்தபோது அதற்கும் விஷயம் புரியாமல் பல கோணங் களில் பலர் எதிர்த்தனர்.
ஆனால் இன்று அந்த மக்களே தமிழ்நாடு அரசு செய்தது மிகவும் வரவேற்கத்தக்கது என்று பாராட் டுகின்றனர் என்று கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக