26 டிசம்பர், 2010

50,000 வீடமைப்புத் திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுப்பு இந்திய உயர்ஸ்தானிகரகம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு


வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுத்துச் செல்லப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பாக சில ஊடகங்களில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டதை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரா லயம், வடக்கின் 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட நிர்மாணப் பணிகளை இந்திய நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் பேர்ஃவெப் லிட்டட்’ நிறுவனம் ஆரம்பித்திருப்பதாகவும், இதில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் ஆரம்ப மாகும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட் டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடமைப்பு நிர்மாணத்துக்கான ஆளணி வளத்தை உள்ளூரில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதோடு, வடமாகாண மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதாகவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உடனடி வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இவ்வீட்டுத் திட்டம் ஆரம் பிக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெயர்ந்த மக்க ளின் சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்கும் திட்ட மும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் கிடைக் கும் தொழிலாளிகள், கட்டடப் பொருட்கள் போன்ற வற்றையும் கூடுதலாக இத்திட்ட த்தில் பயன்படுத்தி இம்மாவட்ட ங்களில் வேலைவாய்ப்புக்கள் மற் றும் பொருளாதார அபிவிருத்தியை யும் ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகி றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வருட ஆரம்பத்தில் இந்தி யாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது, இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் இவ்வீட்டுத் திட்டம் தொடர்பாக அறிவித்திருந்தார். 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கான முழு நிதியும் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதாகவும் உயர் ஸ்தானி கராலயத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய நிதியுதவியுடன் முன்னெ டுக்கப்படும் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் உட்பட வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவிருக்கும் பல புதிய அபிவிருத்தித் திட்டங்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியி ட்டிருந்தது. எனினும், அடிப்படை யற்ற இக்குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்திருந்த நிலையி லேயே, 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் எவ்விதமான தடையுமின்றி முன்னெ டுக்கப்படும் என கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகராலயம் அறிவித்து ள்ளது.

50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் காணப்படும் முரண்பாடான செய்திகள் தொடர்பில் இந்தியாவுடன் பேச இருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தமை குறிப் பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக