24 டிசம்பர், 2010

கப்பம் கோரி அச்சுறுத்தினால் கடும் தண்டனை

மிரட்டுவோர் பற்றி உடன் கவனத்திற்கு கொண்டுவரக் கோருகிறார் பாதுகாப்புச் செயலர்

நகைக்கடை உரிமையாளருடன் சந்திப்பு

நகைக் கடை உரிமையாளர்களை அச்சுறுத்தி கப்பம் கோருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டால் உடனடியாகத் தமது கவனத்திற்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நகைக் கடை உரிமை யாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கடத்தி கப்பம் கோரும் முயற்சியில் எவராவது ஈடுபட்டால் தமது கவனத்திற்குக் கொண்டு வந்தவுடன் அவரைக் கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

கொள்ளையர்கள் தமது நலனுக்காக பொலிஸ் மற்றும் இராணுவச் சீருடைகளைப் பயன்படுத்தி கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ள தாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.

அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் நேற்று (23) தம்மைச் சந்தித்த போது பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.

தம்மை அச்சுறுத்தி கப்பம் கோரி கடத்திச் செல்லும் கொள்ளையர்களைக் கைது செய்து தண்டித்தமைக்காக நகைக்கடை உரிமையாளர்கள், பாதுகாப்புச் செயலாளருக்குப் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ஆய்வுத்துறை பிரதியமைச்சர் பைர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றப் பேரவை உறுப்பினருமான ஏ. எச். எம். அஸ்வர் மற்றும் அல்ஹாஜ் அஹ்கம் உவைஸ் ஆகியோர் தலைமையில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் உயர்மட்டத் தூதுக் குழுவினர் பாதுகாப்புச் செயலாளரை நேற்று (23) சந்தித்து அவரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி ‘அபிவெனுவென் அபி’ நிவாரண நிதிக்கு இரண்டு மில்லியன் ரூபாவை அன்பளிப்புச் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ‘சில கொள்ளையர் சுயலாபம் பெறும் நோக்கத்துடன் பொலிஸ் மற்றும் இராணுவச் சீருடைகளில் சென்று கோடீஸ்வர வர்த்தகர்களை அச்சுறுத்தி பணயப் பணத்தை அபக ரித்துச் செல்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், தான் உடனடியாக பொலிஸாருக்கு இந்தக் கொள் ளையர்களைப் பிடிக்குமாறு உத்தர விட்டு இவர்களில் பெரும்பாலா னோரைக் கையுமெய்யுமாகப் பிடித் துத் தண்டித்திருப்பதாகக் கூறினார்.

எனவே, எதிர்காலத்தில் இவ் விதம் கடத்தல் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டவுடன் உடனடியாகத் தனக்கு அறிவிக்க வேண்டும். அவ் விதம் செய்தால் நான் உடனடியாகக் கொள்ளையர்களைக் கைது செய்து தண்டிப்பேன் என்றும் உறுதியளி த்தார்.

பாதிக்கப்படுபவர்கள் எனக்கு இத் தகைய புகார்களைச் செய்வதில்லை. புகார்கள் கிடைத்தால் சம்பந்தப் பட்டவர்களைக் கைது செய்வோம் என்று தெரிவித்த திரு கோத்தாபய ராஜபக்ஷ, இன்று நாடெங்கிலும் வன்முறைகள், ஆட் கடத்தல், கொள்ளையடித்தல் போன்ற குற்றச் செயல்கள் கணிசமான அளவு குறை ந்துள்ளதென்றும் குற்றமிழைத் தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள் என்றும் கூறினார்.

பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், அல்ஹாஜ் ஹக்கம் உவைஸ் ஆகியோர் இந்த நகை வியாபாரிகளை என்னிடம் கொண்டு வந்ததால் தான் அவர்க ளுக்குப் பாதுகாப்பு அளிக்க முடிந் தது என்று நன்றி தெரிவித்தார். அகில இலங்கை நகை வியாபாரி கள் சங்கத்தின் தூதுக் குழுவினர், தங்களுக்கு 30 ஆண்டு காலத்திற்குப் பின்னர் பாதுகாப்பைப் பெற்றுத் தந்த பாதுகாப்புச் செயலாளருக்குத் தங்கள் நன்றிகளைத் தெரிவித்தார் கள்.

அகில இலங்கை நகை வியா பாரிகள் சங்கத் தூதுக் குழுவில் பின்வருவோர் இடம்பெற்றனர். கே. இராதாகிருஷ்ணன், ஏ. உவைஸ், என். சீனிவாசகம், எஸ். ரமேஷ் காந்த், ஆர். ராபினாத், எம். ராம ஜெயம், கே. இராதாகிருஷ்ணன், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக