24 டிசம்பர், 2010

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்


சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட இலங்கை சிப்பந்திகள் நேற்று காலை நாடு திரும்பினர். 13 இலங்கைச் சிப்பந்திகளில் 11 பேரே நாடு திரும்பியதாகவும், ஏனைய இருவரும் தொடர்ந்து கப்பலில் பணியாற்றுவதற்காக தங்கிவிட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.

சவுதி அரேபிய கப்பல் 9 மாதங்களுக்கு முன் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டது. இதில் இலங்கையரான கப்பல் கப்டனும் 13 சிப்பந்திகளும் பணியாற்றினர். இவர்கள் கோரிய கப்பப் பணமான 224 கோடி ரூபா வழங்கப் பட்டதையடுத்து 13 பேரும் கடந்த 7 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.

சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு அழைத்துவரப்பட்ட இவர்கள், நேற்று அங்கிருந்து விமா னம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கப்ப லின் இரண்டாவது அதிகாரியும் சமையல்காரருமே நாடு திரும்பாது ஜித்தாவில் தொடர்ந்து தங்கியு ள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக