24 டிசம்பர், 2010

யாழ். நகரில் பிரதமர் தலைமையில் தேசிய பாதுகாப்பு தினம்


தேசிய பாதுகாப்பு தினம் நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பிரதமர் தி.மு. ஜயரட்ன தலைமையில் நடைபெற உள்ளது.

தேசிய இராணுவ வீரர்களையும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை கெளரவப்படுத்தும் நோக்கிலேயே இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. யுத்தம் நிறைவுபெற்று சமாதானம் மலர்ந்துள்ள இவ்வேளையில் வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் அம்மக்களுக்கான சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன.

எதிர்வரும் 26ம் திகதி காலை 9.25 முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறும் நாட்டு மக்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக யாழ்ப்பாணம் முற்ற வெளிப்பகுதியில் மினி பஸ்கள், கொழும்பு யாழ்ப்பாண பஸ் சேவையில் ஈடுபடும் பஸ்களும் 25, 26ம் திகதிகளில் அங்கிருந்து செயல்படமாட்டாதென யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்விருதினங்களும், மினி பஸ் சேவைகளும், கொழும்பு யாழ்ப்பாணம் உட்பட பிற மாவட்டங்களுக்கான தனியார் பஸ்களும் முன்னர் போல் யாழ்ப்பாண பஸ் நிலையம் முன்பாகவிருந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிவித்துள்ளார்.

இருபத்தேழாம் திகதி வழமைபோல் யாழ். முற்ற வெளியில் இருந்து சேவைகள் நடைபெறுமென யாழ். மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்களின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக