3 டிசம்பர், 2010

உள்நாட்டு, வெளிநாட்டு சதிகளை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்



அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்படும் சதி முயற்சியை முறியடிக்கும் வகையில் இன்று (03) காலை 9.30 இற்குக் கொழும்பு- கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நடைபெறுகிறது.

மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். பல்வேறு அமைப்புகளும் இதற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளதாக அலவி மெளலானா ‘தினகரனு’க்குத் தெரிவித்தார்.

“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் சிலர் சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தெரிவித்த ஆளுநர் மெளலானா, இன்றைய ஆர்ப்பாட்டம் அந்த முயற்சிகளை முறியடிக்கும் வகையில் அமையுமென கூறினார். ஜனாதிபதிக்கு எதிராக வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது கண்டனத்துக்கு உரியது என்று குறிப்பிட்ட ஆளுநர், இதில் நம்நாட்டு அரசியல்வாதிகள் பங்கேற்பது மிகவும் மோசமான நிலையாகுமென்றும் சுட்டிக்காட்டினார்.

ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன அண்மையில் இவ்வாறான ஒரு முயற்சிக்குத் துணை போனார் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இவ்வாறான அரசியல்வாதிகளு க்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு நடவ டிக்கை எடுக்குமென்று தேசிய பாதுகாப் புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக