26 நவம்பர், 2010

சிரேஷ்ட அமைச்சர்கள் நியமனம்: அரசியலமைப்புக்கு முரணானதல்ல அமைச்சர் சுசில்

சிரேஷ்ட அமைச்சர்கள் நியமனம் அரசியலமைப்புக்கு எந்த வகையிலும் முரணானது அல்லவென்று அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிரணி உறுப் பினர்களின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்தான் நிதியமைச்சராக இருக்க வேண்டுமென்ற நியதி கிடையாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றுகையில் இந்த விளக்கங்களைத் தெரிவித்தார். ஜனாதிபதி விரும்பிய பொறுப்புகளைத் தம் வசம் வைத்துக் கொள்ளவும், வேண்டியவர்களை நியமிக்கவும் அதிகாரம் உண்டு.

நிதிய மைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்திருக் கிறார். அதனால் அவர் பாராளுமன்றத்தில் இருக்க மாட்டார் என்று கூற முடியாது. அரசியலமைப்பின் 18ஆவது திருத் தத்தின்படி மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி பாராளு மன்றத்திற்கு வருவார். அவருக்கென ஓர் ஆசனமும் பாராளுமன்றத்தில் ஒதுக் கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிரணியினரின் கூற்றை முற்றாக நிராகரிக்கிறேன் என்று அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் குறிப் பிட்டார்.

“வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து அது பற்றிய விவாதம் முடி வடையும் வரை நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். இங்கே ஜனாதிபதி நிதியமைச்சராக இருப்பதால் அது சாத்தியமில்லை.

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதிதான் இருக்க வேண்டும் என்றோ, நிதியமைச்சராக ஜனாதிபதி இருக்கக் கூடாது என்றோ அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை” என்று கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன், எவ்வாறெனினும் நிதி யமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பு வகிப்பதுதான் சிறப்பு என் றார். இதற்குப் பின் உரையாற்றிய அமைச்சர் பிரேம்ஜயந்த் இக்கூற்றை நிராகரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக