16 நவம்பர், 2010

அவசரகாலச் சட்டத்தால் தமிழர்களின் வாழ்வியல் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன: சிறிதரன்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தால் தமிழர்கள் தமது வாழ்வியல் உரிமைகளை இழந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

இன்று நடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசர காலச் சட்டம் நீடிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் இதனைத் தெரிவித்தார்

. இங்கு தொடரந்து கருத்து தெரிவித்த அவர், அவசர காலச் சட்டத்தினுடைய பலம், பலவீனம் என்பவற்றுக்கு அப்பால் இச்சட்டத்தினூடாக தமிழர்கள் தொடர்ச்சியாக கண்டிக்கப்படுகின்றனர். இதனால் வாழ்வியல் உரிமையை தமிழர்கள் இழந்துள்ளனர்.

இதனால் தமிழ் மக்கள் தொடர்ந்து அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அதன் பிரதிபலனாகதான் இவற்றை நாங்கள் இன்று அனுபவிக்கின்றோம். அவசர காலச் சட்டம் நீடிக்கப் பட்டு அது தமிழர்களுக்கு எதிராகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதுவே உண்மை.

எனவே நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்கி சாதாரண சிவில் சட்டங்களின் பிரகாரம் வழிநடத்த வேண்டும். என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக