16 நவம்பர், 2010

மக்களின் இயல்பு வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு : டக்ளஸ் தேவானந்தாஎமது மக்களின் இயல்பான வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஏ9 பாதை அகலமாக்கல் மற்றும் புனரமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்கான தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

புனரமைப்புப் பணிகளின் போது உள்ளுர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பதுடன் அடுத்த நேரம் என்ன நடக்கும் என்ற நிலைமாறி இன்று நம்பிக்கையான வாழ்வைக் கிடைக்கச் செய்த ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளதாகவும், எமது சமூகம் எதிர்காலத்தில் வளமான தேசத்தில் நம்பிக்கையுடன் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்தித் தருவது மட்டுமல்லாமல் மக்களின் இயல்பான வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படுமென்றும் அதற்காக தமது கட்சி தொடர்ந்து பாடுபடும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக