16 நவம்பர், 2010

உலகில் சூழல் பாதுகாப்பில் நாம் முன்னணியில் இருக்கிறோம் ஜனாதிபதி




உலகில் இன்று பாரிய சவாலாக உள்ளது புவி வெப்பமயமாகும் பிரச்சினை. இந்த சவாலை உலகத்துக்கு ஏற்படுத்தியவர்கள் மனிதர்களேயாவர். அபிவிருத்தியடைந்த நாடுகள் பெருமளவு காபன் வாயுவை சூழலுக்கு வெளியிடுகின்றன.

எமது நாட்டில் மிகவும் சிறிய அளவு காபன் வாயுவே வெளியேற்றப்படுகிறது. இதன்படி, உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளை விட நாம் சூழல் பாதுகாப்பில் முன்னணியில் இருக்கிறோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டுக்கு சுதந்திரமும் கெளரவமும் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாண நிகழ்வின் முதற் கட்டமாக நேற்று (15) காலை 10.07 க்கு நாடளாவிய ரீதியில் 11 இலட்சம் மரங்களை நடும் தேசத்துக்கு நிழல் நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10.07 க்கு இடம் பெற்ற சுபவேளையில் ஜனாதிபதி இல்லத்தில் மரமொன்றை நாட்டி வைத்து “தேசத்துக்கு நிழல்” வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அங்கு உரையாற் றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் மேலும் கூறியதாவது, எமது எதிர்கால பரம்பரைக்கு மிகவும் சிறப்பான சேவையொன்றை ஆற்றிய இனம் என்பதை நான் மகிழ்ச்சி யுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இன்று இந்த நாட்டில் 11 இலட்சம் பேர் 11 லட்சம் மரங்களை நாட்டினர். இலங் கையில் மட்டுமன்றி உலகில் உள்ள எமது தூதரகங்களிலும் உயர்ஸ்தானிகராலயங் களிலும் உள்ள ஊழியர்களும் இவ்வாறு ஒரே நேரத்தில் மர நடுகையில் ஈடுபட் டுள்ளனர். எமது எதிர்கால பரம்பரைக்கு உதவும் வகையிலேயே இவ்வாறானவொரு சிறப்பான சேவையை செய்ததாக நாம் மகிழ்ச்சியடைய முடியும்.

நாம் இப்போது வசிப்பது ஒரு சுதந்திர நாட்டிலேயாகும். நாட்டை கட்டியெழுப் பியவாறே நாம் பாரிய பொருளாதார தூண்டுதலை மேற்கொள்ளும் போது எமக்கு சுதந்திரத்தின் சீரான காற்றை மூச்செடுக்கவும் முடிகிறது.

சரித்திரப்பூர்வமாகவே எமது நாடு சூழல் நட்புறவுடன் கூடியது. இந்த நாட்டை நிர்வகித்த அனைவரும் சூழலை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை காட்டி யவர்கள். அவ்வாறான ஒரு யுகத்தை மீண்டும் கட்டியெழுப்ப “தேசத்துக்கு நிழல்” வேலைத் திட்டம் பெரிதும் உதவும்.

எமது கிராமங்களில் அன்று வீடொன்றை கட்டுவதற்கு மரமொன்றை தறிக்க நேரிட்டால் அந்த மரத்தை வணங்கி விட் டுத்தான் அதனை தறிக்க ஆரம்பிப்பார்கள். பழமொன்றை பறிக்கும் போதும் முதலில் மரத்துக்கு வணக்கம் சொல்வார்கள். மரமொன்றை தறிப்பதனால் செடியொன்றை நட்ட பிறகே மரத்தை தறிப்பார்கள். அவ்வாறு தான் எமது கிராம மக்கள் வளர்ந்து வந்தார்கள். அந்த விதம் இப்போது இல்லை.

அனைத்து பாடசாலைகளிலும் உள்ள சிறுவர்கள் இன்று மரமொன்றை நாட்டியுள்ளனர். வெறுமனே மரத்தை நாட்டி விட்டால் மட்டும் போதாது. அதனை பேணி வளர்க்கவும் வேண்டும்.

புதிதாக மரமொன்றை நாட்ட ஆரம்பிக் கும்போது இன்று நட்ட மரம் எவ்வளவு வளர்ந்துள்ளது என்று நீங்கள் சந்தோசமடைய முடிந்தால் உங்களுக்கு மிகுந்த திருப்தி ஏற்படும். அவ்வாறான திருப்தியை பெற நீங்கள் இப்போது தயாராக வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள், அரச அதிகாரிகள், மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மத பூசகர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் இன்றைய “தேசத்துக்கு நிழல்” நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக