பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் தொகை வீழ்ச்சியடைந்து வருவதற்குக் காரணம் அதன் கடினமான போக்காகும். பௌத்தம் உலகில் முதலிடத்திலிருந்து இன்று நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்கா தெரிவித்தார்.
கண்டி பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர்,
"தற்போது உலகம் மிக வேகமாக முன்னேறிச் செல்கிறது. இன்னும் 25 வருடங்களில் தீப்பெட்டி போன்ற கருவி ஒன்றின் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள மக்களுடன் பேச முடியும் என்று ஆதர் சீ க்லாக் 1964ஆம் ஆண்டு கூறியபோது, அவர் பைத்தியக்காரர் என்று அப்போது பாடசாலை மாணவர்களாக இருந்த நாங்கள் கூறினோம்.
ஆனால் இன்று அது உண்மையாகிவிட்டது.
அன்று உலகில் முதலிடத்தில் பௌத்த மதம் இருந்த போதும் தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணம் பௌத்த மதத்தில் காணப்படும் நடைமுறைச் சிரமங்களேயாகும்.
உலகில் ஐந்தாவது மிகப்பெரிய சனத்தொகையுடைய நாடான இந்தோனேசியா ஒரு பௌத்த நாடு. ஆனால் அவர்களுடைய தொழில் மீன்பிடிப்பது. பௌத்த மதத்துக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுவதனால் இன்று முழு இந்தோனேசியாவும் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாடாகி விட்டது.
மாலைதீவும் அப்படியே மதம் மாறிய ஒரு நாடாகும்.
உலகிலுள்ள 190 கோடி மக்கள் கிறிஸ்தவர்களாவர். 120 கோடி பேர் முஸ்லிம்களும் 90 கோடிப் பேர் இந்துக்களுமாவர்.
ஆனாலும் பௌத்த மக்கள் 35 கோடியினரே உளர்" என்றும் அமைச்சர் கூறினார்.
மத விவகார பிரதி அமைச்சர் எம்.கே.டீ.எஸ். குணவர்தன உட்பட பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக