ரஷியா “புலாவா” என்ற புதிய ஏவுகணை சோதனை நடத்தியது. இது கண்டம் விட்டு கண்டம் 150 கிலோ டன் அணுகுண்டுகளை தாங்கியபடி 8 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கக் கூடியது. இந்த ஏவுகணை சோதனை காம்சாத்கா தீப கற்பத்தில் வைத்து நடத்தப்பட்டது.
ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷிய ராணுவம் இந்த ஆண்டு ஏற்கனவே 3 ஏவுகணைகள் சோதனை நடத்தியுள்ளது. அவற்றில் 2 நீர்மூழ்கி கப்பலை தாக்கக் கூடியதாகும். தற்போது வெற்றிகரமாக ஏவப்பட்ட புலாவா ஏவுகணை மேலும் பல பரிசோதனைகளுக்கு பிறகு ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக