9 அக்டோபர், 2010

ஒரே கட்டண அறவீட்டில் கொழும்பில் விசேட பஸ் சேவை 12 கி.மீ. சுற்று வட்டத்தில் பயணம் செய்ய ரூ. 10






ஒரே அளவு கட்டண அளவீட்டுடன் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு 12 கிலோ மீற்றர் சுற்று வட்டத்தில் பயணிக்கும் புதிய பஸ் சேவையொன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்ப டும் பஸ் புறக்கோட்டை, மருதானை, பொரளை, நாரஹென்பிட்டிய, கிருளபனை, ஹெவ்லொக் டவுன், டவுன்ஹோல் ஊடாக மீண்டும் கொழும்பு கோட்டையை வந்தடையும். பயணி ஒருவர் எந்த பஸ் தரிப்பு நிலையத்தில் ஏறி எந்த பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கினாலும் 10 ரூபா மட்டுமே அறவிடப்படும்.

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் பஸ் வண்டி மீண்டும் அதே இடத்தை 30 நிமிடங்களில் வந்தடையும். மூன்று பஸ் வண்டிகள் சேவையிலீடு படுத்தப்படும். காலை 6 மணிக்கு சேவை ஆரம்பமாவதுடன், இரவு 7.30 மணி வரை சேவை நடத்தப்படும்.

இலங்கை போக்குவரத்து சபையின் இலச்சினையுடன் மஞ்சள் நிறமும் சிவப்பு நிறமும் கலந்த வர்ணத்தையுடை யதாக பஸ் வண்டிகள் தயார்படுத்தப்பட் டுள்ளன. நாரஹேன்பிட்டிய இ. போ. ச. தலைமையலுவலகத்திலிருந்து பொரளை வரை அமைச்சர் குமார வெல்கம பஸ் சேவையை ஆரம்பிக்குமுகமாக பஸ்ஸை செலுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக