19 செப்டம்பர், 2010

கரடியனாறு சம்பம் போன்று இனி நடக்காமல் நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்: துரைரட்ணம்

கரடியனாறு வெடிப்புச் சம்பவமானது முழுநாட்டையுமே விழிப்புடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களையும் கூட ஒருகணம் திகைப்படையவைத்துள்ளது. எனவே கரடியனாறு சம்பவம் போல் இனி நடக்காமல் பாத்துக் கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா. துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.

கரடியனாறு சம்பவம் குறித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டு அவர் ஜனாதிபதி மஹிந்த ராஸபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள் கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இச்சம்பவமானது இக்கிராமத்தையும் ,பிரதேசத்தையும் ,மாவட்டத்ததையும், ஏன் முழுநாட்டையுமே விழிப்புடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களையும் கூட ஒருகணம் திகைப்படையவைத்துள்ளது.

இனியும் இப்படியொரு சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு இது தொடர்பான வேலைகளில் ஈடுபடும் நிறுவனங்களும், அரசும் மிகவும் அவதானமாக செயல்படுவதோடு கண்காணிப்பும், மேற்பார்வையும்அவசியமாக்கப்பட வேண்டும்.

இச்சம்பவ தினத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர்கள், முறைபாடு காரணமாக பொலிஸ் நிலையம் வந்தவர்கள் நிறுவனத்தில் வேலைசெய்தவர்கள், கமநலச்சேவை கேந்திர நிலையத்திற்கு வேலை நிமித்தம் சென்றவர்கள் எனப் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

இச்சம்பவம் நடந்த பகுதியில் உள்ள மக்கழும் பாதிக்கப்பட்ட மக்களும் மிகவும் வறியமக்கள். இவர்களின் இறுதிக் கடமைக்காக பாலர்சேனை, இலுப்பையடிச்சேனை கிராமத்திற்கு நான் இவர்களின் வீடுவீடாகசென்று பார்தபோது இவர்களின் வறுமை சொல்லிலடங்காது. இதனால் விரைவாக நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இச்சப்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை செங்கலடி பிரதேச வைத்தியசாலை, கரடியநாறு மாவட்ட வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளில் கடமையாற்றிய ஊழியர்கள், தாதியர்கள், வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், பணிப்பாளர் இவர்கள் அனைவரினதும் துரிதசேவையானது மிகவும் பாராட்டதக்க சேவையாகும்.

இதேவேளை இச்சம்பவத்தின் போது உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற அரச, தனியார் நிறுவன வாகன உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் இவ்விடத்தில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நானும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரும் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடும்போது வாகனத்தில் கொண்டுவந்தவர்களை இறக்குவதும் இவர்களுக்கான மருத்துவ கடமைகளை மிகவும் அக்கறையுடனும் சேவை மனப்பாங்குடனும் விறுவிறுப்பாக செயலாற்றியமையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பார்கக்கூடியதாக இருந்தது. இதுசேவையின் முன்னுதாரணமே. இந்த நல்ல சேவைக்கு பரிபூரண ஒத்துளைப்பை பாதுகாப்புதரப்பினர் வளங்கிக் கொண்டிருந்தனர்.

தற்செயலாக நடந்த இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிடப்படும் விடயங்களை அரசு கவனத்தில் கொள்வது சிறந்ததாகும். குறிப்பாக இச்சம்பவம் இனிமேலும் நடக்காமல் பாத்துக்கொள்வதற்கு அரசு பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும், பொதுமக்களும் சமூகத் தலைவர்களும் இது தொடர்பான செயல்பாடுகள் நடக்கும் பகுதிகளில் எதிர்காலத்தில் அவதானமாகமும் விழிப்புடனும் இருப்பதோடு பாதுகாப்பற்ற முறையில் எதாவது வேலைகள் நடந்தால் உரியவர்களிடம் முன்கூட்டியே முறைப்பாடு செய்யவேண்டும். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக