22 ஆகஸ்ட், 2010

இந்திய சிறப்பு தூதுவரை இலங்கை வரவேற்பதன்பொருள் என்ன?: நெடுமாறன் கேள்வி

சிறப்பு தூதுவர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பிவைப்பதால் அவர் மூலம் என்ன உண்மை வெளியுலகுக்குத் தெரிந்துவிடப் போகிறது என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் ஜீவா பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற போது செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவிற்கு விஜ்யம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து, இலங்கைத் தமிழர்கள் நிலைமை குறித்து விளக்கியுள்ளனர். சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இங்கிருந்து சிறப்புத் தூதரை அனுப்பி என்ன உண்மை தெரியவரும். ஐ.நா. குழுவை அனுமதிக்காத இலங்கை அரசு இந்திய அரசின் தூதரை வரவேற்கிறது என்றால் அதன் பொருள் என்ன? இந்தியத் தூதர் வெளியிடும் அறிக்கை, ஐ.நா. குழுவை அனுமதிக்க மறுத்ததற்குப் பதிலாக காட்டப்படும். வேறு எதுவும் நடக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக