காரக்காஸ்(வெனிசூலா):சைக்கிள், பைக், கார் என வாகனங்கள் திருடு போவதைப் போல், விமான நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த தனியார் நிறுவன சிறிய ரக விமானத்தையும் யாரோ கொள்ளை அடித்துச் சென்று விட்டனர்.போதைப் பொருள் கடத்துபவர்கள் தங்களது தேவைக்காக விமானத்தை கொள்ளை அடித்திருக் கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வெனிசூலா நாட்டின் தலைநகரான காரக்காஸ் நகரின் மைகெட்வியா சர்வதேச விமான நிலையத்தில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. இவ்விமானத்தை 13ம் தேதி பார்த்தவர்கள் உண்டு.ஆனால், 16ம் தேதி காலையில் அவ்விமானத்தை அங்கு காண வில்லை. அவ்விமானம் மாயமானது குறித்து விசாரணை நடந்து வருகிறது.விமான நிலையத்தில் நிறுத்தப் படும் விமானங்கள் குறித்து பாது காக்கப்படும் தகவல்களிலும் அவ் விமானம் எப்போது எங்கு பறந்து சென்றது என்பது குறித்த விவரங்கள் இல்லை.
போலீசார் விசாரணையில் போதைப் பொருள் கடத்தும் கும்பல் தங்களது கைவரிசையை காட்டியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.அவ்விமானம் விமான நிலைய ஓடு பாதையில் (ரன்வே) 100 மீட்டர் ஓடினாலே வான் நோக்கி மேலெழும்ப முடியும்.இதனால் விமானங்கள் நிறுத்தப் படும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இவ்விமானத்தை மிக எளிதாக இயக்கி கொள்ளை நடந்திருக்கலாம் என விமான நிலைய அதிகாரிகள் கருதுகின்றனர்.எது எப்படியோ, சைக்கிள்,பைக், கார் போன்ற வாகனங்களை நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து களவாடி செல்வது போல், தற்போது சிறிய ரக விமானத்தையும் களவாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக