22 ஆகஸ்ட், 2010

செல்வச் சந்நிதி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நாளை



வரலாற்றுப் புகழ் மிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நாளை திங்கட்கிழமை 23ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதிகாலை முதல் விசேட பூசைகள் மற்றும் அபிஷேகங்கள் இடம் பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து முருகன் தேரில் வீதியுலா வரும் நிகழ்வு இடம்பெறும். அடியவர்களின் நன்மை கருதி யாழ்.குடாநாட்டின் நான்கு புறங்களில் இருந்தும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணிமுதல் விசேட பஸ் சேவைகளை யாழ். மாவட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையினர் நடத்துகின்றனர்.

தனியார் சிற்×ர்திச்சேவையினரும் கூட விசேட சேவைகளை குடாநாட்டின் பலபகுதிகளில் இருந்தும் நடத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை நீண்ட காலத்தின் பின்னர் இம்முறை ஆலய சுற்றாடலில் அடியவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூடுவார்கள் எனவும் காவடிகள் மற்றும் பால்குடம் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் மற்றும் யாழ்.குடாநாடு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் உட்பட தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் கூட தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக