22 ஆகஸ்ட், 2010

ஆஸ்திரேலிய பார்லிமென்ட் தேர்தல்:எந்த கட்சிக்கும் மெஜாரிட்டியில்லை





மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் 70 ஆண்டுகளுக்குப் பின், தொங்கு பார்லிமென்ட் அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சியான, பிரதமர் ஜூலியா கிளார்டு தலைமையிலான ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சிக்கும், டோனி அபோட் தலைமையிலான கன்சர்வேடிவ் லிபரல் தேசிய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. 58 சதவீத ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், தொழிலாளர் கட்சி 68 இடங்களிலும், கன்சர்வேடிவ் லிபரல் கட்சி 62 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. பல தொகுதிகளிலும் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது.இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், "தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என, தெரிகிறது. இதனால், ஆஸ்திரேலிய அரசியலில் 70 ஆண்டுகளுக்குப் பின், தற்போது தொங்கு பார்லிமென்ட் அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது' என்று கூறியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக