15 ஆகஸ்ட், 2010

சன் ஸீ: இலங்கை தமிழ் அகதிகள் கனடாவில் தரையிறக்கம்; விசாரணை ஆரம்பம்


தகுந்த காரணமிருந்தால் அகதி அந்தஸ்து - கனடிய அமைச்சர்

சன்கூ கப்பல் மூலம் பிரிட்டிஷ் கொலம் பியாவை சென்றடைந்துள்ள இலங்கையர் களை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த தகவலை கனேடிய பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவிக் தெரிவித்துள்ளார்.

சன் கூ கப்பல் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல் லப்பட்டது. இந்த நிலையில், அதில் பய ணித்த 490 பேரின் சுகாதார நலன் குறி த்த விடயங்கள் தற்போது முன்னெடுக் கப்படுவதாக கனேடிய செய்திகள் தெரி விக்கின்றன.

விசாரணைகளின் பின்னர் உரிய காரண ங்களை கொண்டிருப்பவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனைய வர்கள் நாடு கடத்தப்படுவரென பொதுமக்கள் நலன் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கப்பலில் சென்ற வர்களில் சிறு தொகையினரே நோய்களுக்கு உட் பட்டுள்ளதாகவும், அவர்களும் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு விரைவில் அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்களென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் விக்டோரியா நகரத்தை வந்தடைந்த அகதிகள் நகரத்தின் அண்மை யிலிருக்கும் கனடிய இராணுவ முகாம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளனர்.

உடல் நலப் பரிசோதனையைத் தொடர்ந்து 9 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தவர் களில் 45 சிறுவர்களும், இரு கற்பிணிகள் உட்பட 90 பெண்களும் உள்ள னரென உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக் கின்றன. உடனடி சோதனைகள் முடிந்தபின் இன்று ஞாயிற்றுக்கிழமை அனைவரும் வெவ்வேறு தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுவார்களெனத் தெரிய வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள், ஆண்களின் தடுப்பு முகாம்களில் அல்லாது தனிப்பட்ட வேறு தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக